”குருமூர்த்தி ஒரு போலி பிராமணர்..” உண்மையான பிராமணர் யார் என விளக்கம் கொடுத்த சுப்ரமணியன் சுவாமி
பெரும்பாலான தமிழ் பிராமணர்களின் பிரச்னை என்னவென்றால் ‘’ பிராமணருக்குரிய குணங்கள் ஏதும் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான்
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி குறித்து ட்விட்டரில் பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவரின் ட்விட்டர் பதிவு ஒன்றில் திகார் சிறையில் மற்றொரு சத்தியாகிரகம் நடக்க உள்ளது. இந்த சத்தியாகிரகம் பிரமாண்டத்துடன் ஆரவாரத்துடன் நடைபெறும். உண்மையான பிராமணரை ஒருபோதும் தொந்தரவு செய்யாதீர்கள் அல்லது காட்டிக் கொடுக்காதீர்கள். அமித்ஷாவின் ஆலோசகர் குருமூர்த்தி போன்ற போலி பிராமணர்களைப் பற்றி நான் பேசவில்லை. உண்மையான பிராமணர் ஞானி தியாகி & சஹாசி.
There is another satyagraha which is going to Tihar: Satya Graha. This is the graha Mama Mia and Bambino must go. Lesson : Never trouble or betray a genuine Brahmin. I am not talking about fake Brahmins such as Gurumurthy, Amit Shah’s adviser. True Brahmin is Gyani Tyagi&Sahasi.
— Subramanian Swamy (@Swamy39) June 16, 2022
உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள குருமூர்த்தியை ஏன் எதிர்க்கிறீர்கள்? ; பிராமணர்கள் அனைவரும் ஒன்று திரளாததன் பிரச்னை இது என அவரின் ஃபாலோயர் ஒருவர் எழுப்பி உள்ள கேள்விக்கு, குருமூர்த்தி உண்மையான பிராமணன் இல்லை, பிராமணனுக்குரிய குணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. பெரும்பாலான தமிழ் பிராமணர்களின் பிரச்னை என்னவென்றால் ‘’ பிராமணருக்குரிய குணங்கள் ஏதும் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் என அவர் ட்விட் செய்துள்ளார்.
Gurumurthy is not a genuine Brahmin. He has none of the gunas of a Brahmin. The problem with most Tamil "Brahmins" is that they have none of the gunas required of a Brahmin.
— Subramanian Swamy (@Swamy39) June 16, 2022
தமிழக பாஜக விவகாரங்களை கையாள்வது தொடர்பாக ஆரம்பம் முதலே சுப்பிரமணியன் சுவாமிக்கும், துக்ளக் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சுவாமியின் இந்த ட்விட்டர் பதிவு மூலம் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்