Aadhav Arjuna : ”சொன்ன வேலையை செய்யாமல், சொந்த வேலையை பார்ப்பதா?” ஆதவ் அர்ஜூனா ரெய்டு பகீர் பின்னணி..!
"தாங்கள் கொடுத்த அசைன்மெண்டை நிறைவேற்றாமல், தற்போது தன்போக்கில் சென்றுக்கொண்டிருக்கும் ஆதவ் அர்ஜூனாவிற்கு கிடுக்குப்பிடி போடவே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது”

இன்று காலை முதல் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதானை நடத்தி வருகிறது. அவரின் மருமகனாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனுக்கு உரிய இடங்களிலும் இந்த ரெய்டு சம்பவம் நீண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த சோதனை 20 இடங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. இதற்கான பொதுவாக காரணமாக கூறப்படுவது சட்டவிரோத லாட்டரி மூலமாக நடந்த நிதி மோசடிதான்.
2012 மார்டின் மீது FIR பதிவு
2012ஆம் ஆண்டில் லாட்டரி சீட்டு மூலம் சிக்கிம் மாநில அரசையே ஏமாற்றி, மோசடி செய்ததாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இந்த வழக்கில் 278 கோடி ரூபாய் மதிப்பிலான மார்ட்டினின் சொத்துகளை முடக்கியது. அதில், அசையா சொத்துகள் பலவையும் தமிழ்நாட்டில் அவர் வாங்கி குவித்தவை.
மார்ட்டின் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து விசாரித்து வருகிறது. மார்ட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோதமான செயல்பாடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை ஆதாயமாக பெற முயற்சி செய்ததாக புலனாய்வு அமைப்புகள் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளன. குறிப்பாக, Future Gaming and Hotel Services என்ற நிறுவனம் மூலமாக இந்த பரிவர்தனைகள் நடைபெற்றுள்ளது என புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
வளையத்தில் வந்த ஆதவ் அர்ஜூனா, ஏன் ? எதற்காக ?
இந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்தால், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக, ஆதவ் அர்ஜூனாவின் மாமனாரான லாட்டரி அதிபர் மார்ட்டினை வழக்கில் இருந்து விடுவிக்க ஏதுவாக, மத்திய பாஜக அரசை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் ஆதவ் அர்ஜூனாவிடம் டீல் பேசியதாகவும், தொடக்கத்தில் அதற்கு ஒத்துக்கொண்ட ஆதவ் அர்ஜூனா, பின்னர் தன்போக்கில் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த முக்கிய பிரமுகர்கள் மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை மூலம் மார்ட்டினும் ஆதவ் அர்ஜூனாவிற்கும் கிடுக்குபிடிப்போட முடிவு எடுத்துள்ளதாகவும், தாங்கள் சொன்ன அசைன்மெண்டை தமிழ்நாட்டில் சரியாக நிறைவேற்றாவிட்டால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

