"இன்று புதுக்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்" - இறுதி நிமிடத்தில் தீடீர் ரத்து.!
சேலம் செல்வதால் வரும் 19ம் தேதிக்கு புதுக்கோட்டை பயணம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள், மக்களுக்கு தங்களுடைய வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன. கட்சி தலைவர்கள் தங்களுடைய மனுக்களை அவரவர் தொகுதிகளில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களும் கொளத்தூர் தொகுதியில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதன் பிறகு சிறப்பு விமானம் மூலம் திருச்சி சென்ற அவரை தி.மு.க-வினர் வரவேற்றனர். அங்கிருந்து திருவாரூர் சென்ற அவர் அப்பகுதி தி.மு.க வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து இன்று ஸ்டாலின் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு இன்று புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தீடீர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் புதுக்கோட்டை பயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக மாவட்ட திமுக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவசர வேலையாக ஸ்டாலின் அவர்கள் சேலம் செல்வதால் வரும் 19ம் தேதிக்கு புதுக்கோட்டை பயணம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி, சேலம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஏற்கனவே திருமதி. ஜீவா ஸ்டாலின் போட்டியிட இருந்த நிலையில் தற்போது அவருக்கு மாற்றாக திரு. கு. சின்னதுரை போட்டியிட உள்ளதாக திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.