மேலும் அறிய

Tindivanam constituency : திண்டிவனம் தொகுதியை கைப்பற்ற போட்டி போடும் திமுக நிர்வாகிகள்.! முந்தப்போவது யார்.?

தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு தரப்பும் மாறி மாறி வெற்றி பெற்று வரும் திண்டிவனம் தொகுதியில் திமுக சார்பாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்.? திமுக தலைமையின் முடிவு என்ன.?

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்களின் தேர்வையும் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. யாரை களத்தில் இறக்கினால் வெல்ல முடியும் என ரகசிய சர்வேக்களையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக சார்பாக எப்படியாவது சீட்டை பெற்று களம் இறங்க வேண்டும் என திமுகவினர் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு  வருகின்றன. 

போட்டி போட்டு விருப்ப மனுக்களை வாங்கும் திமுகவினர்

ஏராளமான திமுகவினர் ஆர்வமாக விருப்பமனுக்களை பெற்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்காக மனுக்களை பெற்று திருப்பி வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக திண்டிவனம் தொகுதி உள்ளது. எனவே இந்த தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தையும் திண்டிவனத்தை குறிவைத்துள்ளது. 

அந்த வகையில் திமுகவில் யார் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீதாபதி சொக்கலிங்கத்திற்கு, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக வேட்பாளர் அர்ஜூனனிடம் சுமார் 10ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். எனவே இந்த முறை புதிய முகத்திற்கு வாய்ப்பு வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திண்டிவனம் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு.?

அந்த வகையில் திண்டிவனம் தனித் தொகுதியில் போட்டியிடுவதற்கு விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளரான கோ. அய்யனார் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். முதுகலை பட்டமும், சட்டப்படிப்பில் முதுநிலை படிப்பை முடித்து 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிவரும் 51 வயதான கோ.அய்யனார், திமுக-வில் கிளைக் கழக செயலாளர், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்து, தற்போது மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

மேலும் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியின் ஆதரவாளரான கோ.அய்யனார், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற  தொகுதி ஏற்கனவே பல முறை முயற்சியும் செய்துள்ளார். இந்த நிலையில் எப்படியாவது திண்டிவனம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

திமுகவின் திட்டம் என்ன.?

இதேபோல முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட மகளிர் அணி செயலாளரான சீத்தாபதி சொக்கலிங்கம் வயது மூப்பின் காரணத்தாலும்  தனது மகன் செந்தில் முருகனுக்கு சீட்டு கேட்டு வருகிறார்.  மேலும் திமுக மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பழனியும் திண்டிவனம் தொகுதியை கைப்பற்றும் போட்டியில் உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget