மேலும் அறிய

TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...

பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல என்ற வசனத்தைப்போல், தனது பெயரை வைத்தே தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள பல பிரச்னைகள் தீர வழி வகுத்துக்கொண்டிருக்கிறார் விஜய். அப்படி என்ன நடக்கிறது.? பார்க்கலாம்...

விஜய் தீவிர கள அரசியலில் இறங்கிவிட்டதால், திமுக தலைமை சற்று கலக்கமடையத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், விஜய் அடுத்ததாக வேங்கைவயல் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அலெர்ட்டான திமுக தலைமை, அவசர அவசரமாக சில விஷயங்களை செய்துவருகிறது.

விஜய்யின் நகர்வுகளால் அவசர நடவடிக்கைகளில் திமுக அரசு

சமீபத்தில் பரந்தூருக்கு விஜய் சென்றதால், மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கிடைக்க, சற்று கலக்கமடைந்துள்ளது. அது தீர்வதற்குள், விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ள வேங்கைவயல் விவகாரத்தில், நீதிமன்ற வழக்கு, தமிழக அரசு விளக்கம், திருமாவளவன் அறிக்கை என பல அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. விஜய் அங்கு செல்வதற்குமுன், இந்த பிரச்னையை ஆஃப் செய்ய வேண்டுமென ஆர்டர்கள் பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிடப்பில் கிடந்த வழக்கு பற்றி அப்டேட் கொடுத்த அரசு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல தலைவர்கள் இந்த விவகாரத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை கேட்டும் குரல் எழுப்பினர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் கிடந்த இந்த வழக்கில், நேற்று(24.01.25), சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் ஆகிய கிராமங்களை உள் அடங்கிய முட்டுக்காடு கிராமத்தின் தலைவர் பத்மா முத்தையா, அங்கிருந்த குடிநீர் தொட்டியின் ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததாகவும், அதற்காக, பத்மாவின் கணவர் முத்தையாவை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்ற நபர் பொய் தகவலை பரப்பி, அதனைத் தொடர்ந்து  குடிநீர் தொட்டி மீது ஏறி  முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் மனித கழிவுகளை கலந்ததாகவும் குறிப்பிடபட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைக்கு பலத்த எதிர்ப்பு 

இந்த நிலையில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என விசிக தலைவர் திருமாளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிபிஐ விசாரணை தேவை என கம்யூனிஸ்ட் கட்சியும், யாரை காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? என இயக்குனர் பா. ரஞ்சித்தும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, பட்டியலின சமூகம் பயண்படுத்தும் குடிநீர் தொட்டியில், பட்டியலினத்தை சேர்ந்த சிலரே மனித கழிவுகளை கலந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்யும் வகையில் சில ஆடியோ, வீடியோ ஆதாரங்களும் பரவி வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தின் தொடக்கத்திலேயே, மனிதக் கழிவுகளை கலந்தது பட்டியலின இளைஞர்கள் தான் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்ததாகவும், அதனை வெளியிட்டால், தேவை இல்லாத சலசலப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்ததாகவும் சொல்லபடுகிறது.

பெயரை வைத்தே பிரச்னைகளை தீர்க்கும் விஜய்

சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜய், இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை, ஆனால் அவரது வருகையின் தாக்கம் பல பிரச்னைகளை தீர்த்துக்கொண்டு வருகிறது. ஆம், தான் ஆட்சிக்கு வராவிட்டாலும், தன் பெயரை வைத்தே தமிழ்நாட்டின் பல முக்கிய பிரச்னைகள் தீர வழிவகுத்துக்கொடிருக்கிறார் விஜய். அதற்கு காரணம், உளவுத்துறையால் திமுக தலைமைக்கு அளிக்கப்பட்ட ரிப்போர்ட் தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய் பரந்தூர் சென்ற பிறகுதான், அந்த விவகாரமே தேசிய அளவில் பேசுபொருளானது. நான் உங்களோடு உறுதியாக நிற்பேன என அவர் அங்கு பேசியதும், பரந்தூர் மக்களின் போராட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. இந்த தகவலும் திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான்,  விஜய் அடுத்ததாக வேங்கைவயலுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதனால் அலெர்ட் ஆன திமுக தலைமை, இந்த விவகாரம் அரசுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் என்பதால், இனி காத்திருக்க வேண்டாம், வேங்கை வயல் விவகாரத்தை உடனே முடியுங்கள், விஜய் அங்கு செல்வதற்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் அடங்கிப்போய் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக சொல்லபடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சில விவகாரங்களில், உடனடியாக நடவடிக்கை எடுக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ, இவர்களது போட்டியில், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் சரி...

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
Embed widget