மேலும் அறிய

Kerala MLA oath: தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ; வரலாற்றில் இதுவே முதன்முறை என புகழாரம்!

கேரளாவின் தேவிகுளம் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராஜா, தனது தாய் மொழியான தமிழில் பதவியேற்றார். தமிழில் ஒருவர் பதவியேற்பது கேரள சட்டமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறை.

கேரள சட்டப்பேரவையில் தேவிகுளம் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜா, தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டு அனைவரையும் ஆச்சரிய பட வைத்தார். 

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்து, மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு இரண்டாவது முறையாக சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வெற்றி பெற்றது, மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளை மட்டுமே வென்றது. 

மீண்டும் பினராயி விஜயனை முதல்வராக்க சிபிஎம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 20ஆம் தேதி இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றுக்கொண்டார். மேலும் 21 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் புதிதாக வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் எம்எல்ஏ-வாக வழக்கறிஞர் ராஜா, தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த அனைவருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

Kerala MLA oath: தமிழில் பதவியேற்ற கேரள எம்.எல்.ஏ; வரலாற்றில் இதுவே முதன்முறை என புகழாரம்!

இடுக்கி மாவட்டத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வபவர்களில் முக்கால்வாசி பேர் தமிழர்கள் ஆவர். மேலும், இந்த மாவட்டம் தமிழக எல்லையோர பகுதியாக இருப்பதால் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் கலந்தே உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏ ஆகியிருக்கும் ராஜா, இதன் காரணமாகவே தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ளார். கேரள சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு எம்எல்ஏ தமிழில் பதவியேற்றுக்கொண்டது இதுவே முதல்முறையாகும். அவரின் பதவிப்பிரமாண காட்சிகள்தான் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியான ராஜா, கோவை  அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்துள்ளார். 

ராஜாவை போல கர்நாடக மாநில எல்லையான மஞ்சேஸ்வரம் தொகுதியில் வெற்றி பெற்ற அஷ்ரப் தனது தாய்மொழியான கன்னட மொழியில் உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டார்.

மேலும், தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ ராஜவுக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் வாழ்த்து கூறினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேரள சட்டமன்றத் தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழர் வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.

எந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்கும் போது, அவர்களுக்கான பதவியேற்பு அதிக கவனம் பெறும். அந்த மாதிரியான சூழலில் எம்.எல்.ஏ., ராஜாவின் தமிழ் மொழி பதவியேற்பு இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவாரத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
அடுத்து 2169 ஆண்டுதான்.! நிறைவடையும் மகா கும்பமேளா.! புனித நீராடல், ரயில் கண்ணாடி உடைப்பு, உயிரிழப்பு.!
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Embed widget