மேலும் அறிய
Advertisement
அமித்ஷாவிடமும், மோடியிடமும் சனாதனத்தை ஒழித்து விட்டோம் எனத் தைரியமாக சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூக்கு உதயநிதி சவால்
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கே 10 கோடி ரூபாய் என்றால், சனாதனத்தை ஒழித்து விட்டதாக சொல்லும் அண்ணன் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடியோ? - உதயநிதி பேச்சு.
மதுரை மாவட்டம் முழுதும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அமைச்சர் உதயநிதி நேற்று இரவு கடைசி நிகழ்ச்சியாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரைக் கல்லூரி மைதானத்தில், திமுகவின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: கடந்த ஒன்றரை வருடங்களில் 30 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து 40 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்கத் தொகை மற்றும் பொற்கிழி மாவட்டக் கழகங்கள் சார்பில் வழங்கி கெளரவித்து இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவில் எந்த இயக்கமும் செய்யாததை திராவிட முன்னேற்க் கழகம் செய்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 20ந் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அந்த இயக்கத்தின் கொள்கைகள் பற்றியோ, அந்த இயக்கம் செய்த சாதனைகள் பற்றியோ பேசப்படவில்லை. மறுநாள் அந்த மாநாட்டில் பரிமாறப்பட்ட சாம்பார் சாதம், புளிச் சாதம் பற்றியே ஊடகங்களில் பேச்சுப் பொருளாக இருந்தது. ஆனால் நாம் சேலத்தில் நடத்தப் போகிற இளைஞரணி மாநில 2 வது மாநாடு, இப்படி ஒரு மாநாடு இந்தியாவிலேயே நடக்க வில்லை என்ற அளவிற்கு நடக்கப் போகிறது. கடந்த செப்டம்பர் 2ந்தேதி நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதற்காக எனது தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தான் வாய் திறந்து ஒன்றை சொல்லி உள்ளார். சனாதனத்தை ஒழிச்சு பல வருஷமாகி விட்டதாக செல்லூர் ராஜூ சொல்லி இருக்கிறார்.
நானாவது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன். அண்ணன் செல்லூர் ராஜூ சனாதனத்தை ஒழித்து பல வருஷமாகி விட்டதாக சொல்கிறார். நான் செல்லூர் ராஜூக்கு சவால் விடுகிறேன். உங்க ஓனநர் அமித்ஷாவிடமும், மோடியிடமும் சனாதனத்தை ஒழித்து விட்டோம் எனத் தைரியமாக சொல்ல முடியுமா?.சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கே 10 கோடி ரூபாய் என்றால், சனாதனத்தை ஒழித்து விட்டதாக சொல்லும் அண்ணன் செல்லூர் ராஜூ தலைக்கு எத்தனை கோடி? உதயநிதி ஒரு நடிகர். அவர்க்கு நடிப்தை தவிர ஒன்றும் தெரியாது என்று சொல்லும் அண்ணன் செல்லூர் ராஜிடம் கேட்கிறேன். உங்க தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும் எங்கிருந்து வந்தார்கள்?
சிஏஜி அறிக்கையில் மத்திய ஒன்றிய அரசால் ஏழரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு, இந்த 9 வருடங்களில் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் விரைவு சாலைத் திட்டத்தில், ஒரு கி.மீ சாலை அமைக்க 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், இறந்து போன 88 ஆயிரம் பேர்க்கு இன்ஷூரன்ஸ் செய்திருப்பதாக பொய்க் கணக்கு காட்டி உள்ளார்கள். இதைத்தான் நமது முதலமைச்சர் கேள்வி கேட்கிறார். இதற்குப் பதில் சொல்ல துப்பு இல்லாமல் பொய் செய்தி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்கள் 2வது நாளாக கண்டன பேட்ச் அணிந்து நூதன முறையில் போராட்டம் - காரணம் என்ன..?
மேலும் செய்திகள் படிக்க - ‘பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னையா..?’...யார் சொன்னது..? - செல்லூர் ராஜூ அந்தர் பல்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion