Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா காரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Toyota Glanza: இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டொயோட்டா. மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா, போன்ற பல்வேறு கார் நிறுவனங்கள் இருந்தாலும் டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கு தனி மரியாதை உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் உள்ள Toyota Glanza கார் பற்றி கீழே விரிவாக காணலாம். இதன் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
Toyota Glanza:
இந்த Toyota Glanza காரின் தொடக்க விலை ரூபாய் 8.02 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 11.33 லட்சம் ஆகும். இதில் மொத்தம் 9 வேரியண்ட் உள்ளது.
1. Toyota Glanza E:
இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 8.02 லட்சம் ஆகும். 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 22.3 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 89 பிஎச்பி திறன் கொண்டது.
2. Toyota Glanza S:
இந்த Toyota Glanza S கார் பெட்ரோலில் ஓடும் திறன் கொண்டது. மேனுவல், ஆட்டமொட்டிக் வெர்சனில் இந்த கார் உள்ளது. இந்த வேரியண்ட் சிஎன்ஜி-யிலும் ஓடும் திறன் கொண்டது. பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூபாய் 9.03 லட்சம் ஆகும். இந்த கார் 89 பிஎச்பி ஆற்றல் கொண்டது. 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 22.3 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோல் ஆட்டோமெட்டிக் காரின் விலை ரூபாய் 9.64 லட்சம் ஆகும். 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். 22.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். சிஎன்ஜி மேனுவல் காரின் விலை ரூபாய் 10.03 லட்சம் ஆகும்.

3. Toyota Glanza G:
டொயோட்டாவின் Toyota Glanza G பெட்ரோலில் ஓடும் மேனுவல் கார் ரூபாய் 10.12 லட்சம் ஆகும். இந்த கார் 22.3 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. 89 பிஎச்பி திறன் கொண்டது. பெட்ரோல் ஆட்டோமெட்டிக் கார் ரூபாய் 10.73 லட்சம் ஆகும். இந்த கார் 22.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. சிஎன்ஜி மேனுவல் கார் ரூபாய் 11.12 லட்சம் ஆகும். 98.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 76 பிஎச்பி திறன் கொண்டது.
4. Toyota Glanza V:
டொயோட்டா கிளான்சா காரின் இந்த Toyota Glanza V காரின் இரண்டாவது வேரியண்ட் உள்ளது. இந்த வேரியண்டில் பெட்ரோல் மேனுவல் கார் ரூபாய் 11.14 லட்சம் ஆகும். 22.3 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். பெட்ரோல் ஆட்டோமெட்டிக் கார் 22.9 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இந்த காரின் விலை ரூபாய் 11.33 லட்சம் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 85 ஆயிரத்து 300 குறைந்துள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக் உள்ளது. இந்த காரில் 1197 சிசி திறன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் கொண்டது. 5 கியர்களை கொண்டது. இந்த கார் நெருக்கடியான நகர்ப்புறங்களில் 17.52 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. நெடுஞ்சாலையில் 22.3 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

7 அல்லது 9 இன்ச் தொடுதிரை கொண்ட தகவல் திரை உள்ளது. பின் இருக்கை நல்ல வசதிகளை கொண்டது. ஆட்டோ முகப்புவிளக்குகள் உள்ளது. 318 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. ஏபிஎஸ் இபிடி வசதியுடன் உள்ளது. ப்ரேக் அசிஸ்ட் உள்ளது. ஹில் ஹோல்ட் வசதியும் உள்ளது. ஆட்டோமெட்டிக் கதவு லாக் உள்ளது. 360 டிகிரி கேமரா உள்ளது. இந்த காருக்கு பயனாளிகள் 4.6 சதவீதம் ரேட்டிங் அளித்துள்ளனர்.
பலேனா, டொயோட்டா அர்பன் க்ரூசர், டாடா அல்ட்ராஸ், சிட்ரான் சி3 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.





















