மேலும் அறிய

‘பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னையா..?’...யார் சொன்னது..? - செல்லூர் ராஜூ அந்தர் பல்டி

நேற்று உதயநிதி கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஆயிரம் ரூபாயாம் இன்று கறிக்கடையில் எல்லாம் ஓவர் கூட்டம்.

அண்ணா, பெரியார் கொண்டுவர வேண்டிய சனாதன மாற்றத்தை  சத்துணவுத் திட்டம் மூலம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்துவிட்டார்.
 
பா.ஜ.க., மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், பாஜக இளைஞர் அணி தலைவர் பாரி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் இணைந்தனர். அப்போது செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "தம்பி உதயநிதி வரலாறு தெரியாமல் பேசுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டு பிள்ளையாகவே உள்ளார்.

‘பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னையா..?’...யார் சொன்னது..? - செல்லூர் ராஜூ  அந்தர் பல்டி
 
சனாதனம் அண்ணா, பெரியார் காலத்திலேயே ஒழிக்கப்பட்டது. சீர்திருத்த திருமணங்களை நடத்தியவர் அண்ணா, அவர்களது தாத்தா, ஜெயலலிதா, எடப்பாடியார் வரை தற்போது பின்பற்றி வருகிறோம். உதயநிதி ஸ்டாலின் இடம் நான் கேட்கிறேன் உங்கள் கட்சியில் தலைவராக தாழ்த்தப்பட்டவரை அருந்ததியரை நிறுத்த முடியுமா.? அண்ணா, பெரியார் கொண்டுவர வேண்டிய மாற்றத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்துவிட்டார். சத்துணவு திட்டம் மூலமாக சமமாக அமர வைத்து உணவளித்தார். எல்லா திட்டங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்க செய்தார். தேர்தல் வந்தாலே இப்படி பேசி வருகின்றனர். சிறுபான்மை ஓட்டை கவர வேண்டும் என்பதற்காக உதயநிதி பேசுகிறார். இஸ்லாமியர்கள் லுங்கி கட்டியவர்கள், தீவிரவாதிகள் என அவர் தாத்தா காலத்தில் கூறினார்கள். அதையெல்லாம் உதயநிதிக்கு தெரியாது.
 
திமுக தேர்தல் வருவதற்கு முன்பு ஒன்று பேசுவார்கள் பின்பு ஒன்று பேசுவார்கள். திமுக 1000 ரூபா கொடுத்தது மக்களிடையே ஆதரவு கொடுக்கவில்லை எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க., ஒரு கோடியை ரூ.6 லட்சம் பேருக்கு தான் ஆயிரம் ரூபாய்  கொடுத்துள்ளனர். மீதி பேருக்கு ஸ்வாகாதான். மாணவர்கள் கல்வி கட்டணம் ரத்து, நீட் தேர்வு ரத்து என கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு  அதனை மறந்து  விட்டார்கள். பி.ஜே.பி.,க்கும் எங்களுக்கும் பிரச்னை உள்ளது என யாராவது பேசி இருக்கிறோமா?., மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன விதம் தவறு என தான் கூறினோம்.

‘பாஜகவுக்கும் எங்களுக்கும் பிரச்னையா..?’...யார் சொன்னது..? - செல்லூர் ராஜூ  அந்தர் பல்டி
 
எங்களுக்கு நட்டா ஜி, அமித்ஷா ஜி,  மோடி ஜி, மதிக்கிறார்கள் அதுபோதும். எப்போதும் தீபாவளிக்கு நெய் பலகாரம் சுடுவார்கள் தற்போது நெய் விலையும் உயர்த்தி விட்டார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாது. நாங்களும் நாளை, மோடிஜிதான் பிரதமராக வேண்டும் என சொல்கிறோம். தமிழ்நாட்டில் எடப்பாடியால் தான் அதிமுக கட்சி உலக தரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது. முதலில் உதயநிதியிடம் சொல்லி மதுரைக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள். கலைஞர் பெயரில் நூலகம் வைப்பது பெருமைதான். ஆனால் மதுரையில் சாலைகள் குண்டு குழியும் ஆக உள்ளது. கொசுத்தொல்லை இப்படி பல்வேறு அடிப்படைப் பிரச்னைகள் உள்ளது. DMK - D டெங்கு M மலேரியா k கொரோனா. அடிக்கடி உதயநிதி மதுரைக்கு வர வேண்டும்.. கூட்டம் நடத்த வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget