கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனை, முக்கிய புள்ளிவிவரங்கள் பார்க்கலாம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கோலியின் அற்புதமான சாதனைகள், சமீபத்திய ஃபார்மைப் பார்க்கலாம்.
இந்தத் தொடரின் முதல் போட்டி இந்த நாளை நடைபெறுகிறது. விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், கோலி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் மீண்டும் களத்தில் இறங்குவதைக் காண காத்திருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான விராட் கோலியின் அற்புதமான ஒருநாள் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.
ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவிடம் ஆதிக்கம் செலுத்தும் கோலி
ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவிடம் ஆதிக்கம் செலுத்தும் கோலி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை மொத்தம் 29 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். மேலும் அவரது சாதனைகள் புள்ளிவிவரங்கள் மற்றும் முக்கிய மைல்கற்களைப் பாருங்கள்:
ரன்கள் - 1,504
ஸ்ட்ரைக் ரேட் - 85.7
சராசரி - 65.4
சதம் - 5
அரைசதம் - 8
அதிகபட்ச ஸ்கோர் - 160 (நாட் அவுட்)
கோலி இப்போது இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தவிர வேற எந்தப்போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆச்சரியப்படும் விதமாக அவர் தொடர்ச்சியாக டக் அவுட் ஆனார். மூன்றாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பி, ஆட்டத்தையும் வென்றுக் கொடுத்தார். இந்திய ரசிகர்களால் 'கிங்' என்று குறிப்பிடப்படும் கோலி, டெஸ்ட் தொடரில் இந்தியாவை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்ற எதிரணிக்கு எதிராக தன்னுடைய பழைய ஆட்டத்தை பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் முழு அட்டவணை
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி: நவம்பர் 30 (ஞாயிற்றுக்கிழமை), ராஞ்சி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ஒருநாள் போட்டி: டிசம்பர் 3 (புதன்கிழமை), ராய்ப்பூர்
IND vs SA 3வது ஒருநாள் போட்டி: டிசம்பர் 6 (சனிக்கிழமை), விசாகப்பட்டினம்
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குப் பிறகு, இந்தியா தென்னாப்பிரிக்காவை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் எதிர்கொள்ளும், அதற்கான அணியை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.



















