மேலும் அறிய

Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

சம்பா நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை காப்பீடு செய்ய, குத்தகை விவசாயிகளுக்கு விவசாயி பதிவு மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் கட்டாயம் என்பதிலிருந்து விலக்களித்து, அனைத்து விவசாயிகளும் 2025, டிசம்பர், 1 ஆம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி.

விவசாயிகளுக்கான திட்டங்கள்

விவசாயிகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார்கள். அந்த வகையில் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இயற்கை சீற்றத்தில் பயிர்கள் பாதிக்கப்படும் போது காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அடையாள அட்டை கட்டாயம் என்ற முறையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26ஆம் ஆண்டில், பிரதமந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் குறுவை, சம்பா, நவரை பருவத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நடப்பாண்டு குறுவைப்பருவத்தில் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்பதிலிருந்து ஒன்றிய அரசால் விலக்களிக்கப்பட்டது. 

பயிர் காப்பீடு- விவசாய அடையாள அட்டை

இந்நிலையில், தேசிய பயிர் காப்பீட்டு வலைதளத்தில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய 2025, செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 15 ஆம் தேதிவரை காலநிர்ணயம் செய்யப்பட்டு பதிவு நடைபெற்று வந்தது. எனினும் தொடர் மழை, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் போன்றவற்றால் சம்பா நெற்பயிர் காப்பீடு தாமதமான காரணத்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் 2025 நவம்பர் 30 ஆம் தேதி வரை ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இது நாள்வரை. 31.33 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7.95 இலட்சம் விவசாயிகளால் 19.06 இலட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 61 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 1 இலட்சம் ஏக்கர் கூடுதலாகும். 

1.63 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு

மேலும், இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தில் 66 ஆயிரம் விவசாயிகளால் 1.63 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், 2025 நவம்பர் 25 ஆம் தேதி முதல் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) கட்டாயம் என்று ஒன்றிய அரசால் மீண்டும் அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் அடையாள எண் பெற்ற நில உரிமைதாரர்கள் தவிர. குத்தகைதாரர்கள். கோயில் நில சாகுபடியாளர்கள் போன்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சியின் காரணமாக, 2025- 2026 ஆம் ஆண்டு சம்பா மற்றும் நவரை பருவ பயிர்களை காப்பீடு செய்ய விதிகளை தளர்வு செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

டிசம்பர் 1ஆம் தேதி வரை காப்பீடு

எனவே, 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை காப்பீடு செய்ய காலநிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் 2025 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும், நில உரிமையுள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாக இ-சேவை மையத்தில் விவசாயி பதிவு (Farmer Registry) மூலம் வழங்கப்படும் விவசாயிகள் அடையாள எண் (Farmer ID) பெற்றுக்கொள்ளுமாறு  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.794 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை, 4 இலட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.697 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீட்டுத்தொகை ஒன்றிய அரசின் பங்குதொகையான 5.67 கோடி பெறப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget