மேலும் அறிய

இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!

தி.மு.க.வின் கொள்கைகளையும், தி.மு.க. ஆட்சியின் செயல்திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவும் பி.ஆர்.எஸ். கட்சியின் நிர்வாகிகள் சென்னை வந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சந்திரசேகர் ராவ். அந்த மாநிலம் உருவாகியது முதல் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவும் தோல்வி அடைந்தார்.

சென்னை வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்:

அடுத்தடுத்து கட்சி சந்தித்த தோல்விகள் காரணமாக கட்சியை வலுப்படுத்த பி.ஆர்.எஸ். தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு பி.ஆர்.எஸ். கட்சியின் நிர்வாகிகளை அனுப்பி திராவிட கொள்கைகளை பின்பற்றி தி.மு.க. எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதை அறிந்து அதை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த பி.ஆர்.எஸ். முடிவு செய்துள்ளது.

இதற்காக பி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் நேற்று சென்னை வந்துள்ளனர். சென்னைக்கு வந்துள்ள அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கை, தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு உத்திகள் போன்ற முக்கிய விஷயங்களை நேரில் சென்று அறிந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த பயணத்தின் மூலம் தமிழ்நாட்டின் ஆட்சி முறைகளையும் அறிந்து கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி:

இந்த பயணத்திற்கு பிறகு தெலங்கானாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக நீதி மற்றும் சமமான நிர்வாகத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த முயற்சிப்போம் என்றும் பி.ஆர்.எஸ். நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், தெலங்கானாவில் இருந்து சென்னை வந்துள்ள பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் இந்த சுற்றுப்பயணத்திற்கு உறுதுணையாக உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.   

தெலங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் படுதோல்வி அடைந்துள்ள பி.ஆர்.எஸ். கட்சி மீண்டும் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது திராவிட கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ள 13 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
அதிமுகவில் கல்யாணசுந்தரத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரமிக்க பதவி: யார் இந்த கல்யாண சுந்தரம்?
’தவெக-வில் இணைந்த வழக்கறிஞர் சங்க நிர்வாகி ரேவதி’ வலுபெறும் தவெக வழக்கறிஞர் பிரிவு..!
'தவெக-வில் இணைந்த வழங்கறிஞர் சங்க நிர்வாகி’ யார் இந்த ரேவதி மணிவண்ணன்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
"பஞ்ச் டயலாக பேசி ஆட்சி நடத்தும் டம்மி முதல்வர்" - காவல் மரணங்கள் தொடர்வதாக எதிர்க்கட்சித்தலைவர் விமர்சனம்!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க சார்! கதறிய பள்ளி மாணவன்! விடாத ஆசிரியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க சார்! கதறிய பள்ளி மாணவன்! விடாத ஆசிரியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
Embed widget