AIADMK Single Leadership: ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது - அதிமுக வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!
ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசியுள்ளார்.
![AIADMK Single Leadership: ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது - அதிமுக வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..! AIADMK Single Leadership Resolution Without O Panneerselvam Consent will not be valid - Vaithilingam AIADMK Single Leadership: ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது - அதிமுக வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/17/dc6101609515adeb21f7f9017dad3cd8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ ஒற்றைத்தலைமை, இரட்டைத்தலைமை பிரச்னை கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிறது. இந்தப்பிரச்னையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம் போல கட்சியை எப்படி வலுப்படுத்துவது, மீண்டும் ஆட்சிக்கு வருவது எப்படி என்பது குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
View this post on Instagram
அப்போது ஓபிஎஸ் தனது கருத்தை தம்பிதுரையிடம் தெரிவித்தார். அதற்கு தம்பிதுரை இதை எதிர்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்தக்கருத்தை கொண்டு சேர்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக நான் எடப்பாடி பழனிசாமியிடம் பேச நேர்ந்தால் நிச்சயம் பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டுத்தான் பின்பு பேசுவேன்.
பொதுக்குழு கூட்டம் நடக்குமா?
பொதுக்குழு கூட்டம் நடப்பதற்கு இருவரும் கையெழுத்திட்டு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதன்பின்னர்தான் இவ்வாறான சூழ்நிலை வந்திருக்கிறது. அதை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு உங்களுக்கு பொதுக்குழு கூட்டம் நடக்குமா இல்லையா என்பதற்கு பதில் சொல்கிறேன்.
ஒற்றைத்தலைமை பிரச்னையை பொருத்தவரை இருவரும் கையெழுத்திட்டால்தான் தீர்மானம் நிறைவேற்ற முடியும். தானாக நிறைவேற்ற முடியாது. அப்படியே நிறைவேற்றினாலும் அது செல்லாது.தலைமை இறந்து போனால்தான் அப்படி செய்ய முடியும். அதையும் மீறி செயல்பட்டால் அதிமுக அழிவுப்பாதைக்கும் அழைத்துச்செல்லும்.” என்று பேசினார்.
இதனிடையே ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)