Video: அரசியல் ஆலோசனை சொன்னாங்க; அதைகேட்டால் எல்லாத்தையும் இழக்கவேண்டியதுதான்- ரஜினி ! குலுங்கி சிரித்த இபிஎஸ்
Actor Rajinikanth Speech: எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்தது விபத்து என , நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த் , அவரது நினைவு குறித்து , தெரிவித்த வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அவர் பேசியதாவது,
ஜானகி அம்மையாரும், எம்.ஜி. ஆர் அவர்களும் சேர்ந்து நடித்த முதல் படம் மருதநாட்டு இளவரசி, இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். எப்போதும் , அவர் வீட்டிற்குச் சென்றாலும் சாப்பாடு கிடைக்கும்,அது ஜானகி அவர்களின் மேற்பார்வையில்தான் நடக்கும். சாதாரண சாப்பாடு இல்லை; கல்யாண சாப்பாடு மாதிரி இருக்கும்.
ரஜினி நன்றாக நடிக்கிறார், ஆனால் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார், அவரது ரசிகரும் அதை பின்பற்ற வாய்ப்பு இருக்கு; ஒரு நாள் ரஜினியை சந்தித்து இதுகுறித்து பேசுகிறேன் என எம்.ஜி.ஆர் கூறியதாக, ஜானகி அவர்கள் என்னிடம் கூறினார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு, ஜானகி அம்மையார் அரசியலுக்கு வந்தது விபத்து என ஜானகி அம்மையாரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார், நடிகர் ரஜினிகாந்த்.
சுயமாக முடிவு எடுத்த ஜானகி அம்மையார், அரசியல் சரிபட்டுவராது; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உன்னால முடுயும்; எங்க கையெழுத்து போடனும் சொல்லு என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தெரிவித்து, அதிமுகவை முழுமையாக ஒப்படைத்தவர் ஜானகி அம்மையார். மிகப்பெரிய குணம படைத்தவர் என ஜானகி அம்மையாரை நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பாராட்டி பேசினார்.
இதையடுத்து, அவரது அரசியல் வருகை குறித்து பேசிய ரஜினிகாந்த், “நான் அரசியலுக்கு வர நினைத்த போது நிறைய பேரை சந்தித்தேன். நிறைய பேர் ஆலோசனை கூறினார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டால் அவ்வளவுதான் எல்லாத்தையும் இழந்து; நிம்மதியை இழந்து விடவேண்டியதுதான்; தெரிந்து சொல்கிறார்களா; தெரியாமல் சொல்கிறார்களா என தெரியாது” என நகைச்சுவையாக கூறினார். அப்போது , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி குலுங்கி சிரித்ததை பார்க்க முடிந்தது.
ரஜினி பேசும் வீடியோ:
திருமதி. ஜானகி அம்மையார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, ஜானகி அம்மையார் குறித்து தன்னுடைய நினைவுகளை காணொளி வாயிலாக பகிர்ந்துகொண்ட திரையுலக சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth #JanakiMGR100 pic.twitter.com/4dJjNzKZZR
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) November 24, 2024
Also Read: Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?