நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப் வகைகள்!

Published by: ஜான்சி ராணி

குளிருக்கு இதமாக ஒரு கோப்பை சூடான தேநீரோ, சூப்போ கிடைத்தால் அதுவே சொர்க்கமன்று மனம் லயித்துவிடும்.

குளிர்காலத்தில் சூப் உணவில் சேர்ப்பது செரிமானத்திற்கு உதவும்..

வீட்டிலேயே தயாரித்து ஜமாய்க்கலாம்.

நான் வெஜ் சூப், வெஜிடேரியன் சூப், வேகன் சூப் என்று அவரவர் பிரியத்திற்கு ஏற்ப நிறைய விதங்களில் தயாரிக்கலாம்.

Vegan Soup

பால், பால் சார்ந்த பொருட்கள் கூட சாப்பிடாதவர்கள் வேகன் உணவு முறை. வேகன் சூப் வகைகளில் பருப்பு அதிகமாக இருக்கும். மதிய உணவிற்கு இந்த வகை பருப்பு சூப் உகந்தது.

காளான் சூப்

100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.

முட்டைகோஸ் சூப்

முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும்.

முட்டைகோஸ் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

முட்டை கோஸ், இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை சேர்த்து செய்யும் இந்த சூப் குளிருக்கு இதமும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும்.

ப்ளாக் பீன் சூப்:

ப்ளாக் பீன், சக்கரவல்லி கிழங்கு சேர்த்து செய்யும் இந்த சூப் அலாதி ருசி கொண்டிருக்கும். இதில் கொஞ்சம் அவகேடோ, ப்ரெஷ் சிலான்ட்ரோ, கொஞ்சம் புளிப்பு மிகு க்ரீம் சேர்த்து பரிமாறலாம்

பீட்ரூட் சூப்

அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளில் சூப் சாப்பிடுவது நல்லது. பீட்ரூட்டில் இந்த குளிர் காலத்தில் சூப் செய்வது நல்லது. பீட்ரூட் சூப்பை சூடாகவும் அருந்தலாம் குளிரவைத்தும் குடிக்கலாம். உப்பும், மிளகுதூளும் போதும்.

ஸ்வீட்கான், பரங்கிக்காய்
ஸ்வீட்கான், பரங்கிக்காய் ஆகியவற்றிலும் சேர்த்து சூப் செய்யலாம்.