களத்தில் 4,175 வேட்பாளர்கள்; இறுதி பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியில் நேற்று மாலை இறுதி செய்யப்பட்ட நிலையில் இம்முறை 4 ஆயிரத்து 175 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 12ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. மார்ச் 19ல் மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் 6 ஆயிரத்து 183 ஆண்கள், ஆயிரத்து 69 பெண்கள் , மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 255 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு நிறைவு பெற்ற நிலையில் கடந்த மூன்று நாட்களாக வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு வாபஸ் நடைமுறைகள் நடைபெற்றது. களத்தில் 4,175 வேட்பாளர்கள்; இறுதி பட்டியல் வெளியீடு
 உரிய முறையில் பூர்த்தி செய்யாதது, உரிய ஆதாரம் அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 743 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.எஞ்சியுள்ள 4 ஆயிரத்து 512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்களை திரும்ப பெறும் பரிசீலனைக்கு பின் இறுதியாக 4 ஆயிரத்து 175 வேட்பாளர்கள் களம் காண்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. களத்தில் 4,175 வேட்பாளர்கள்; இறுதி பட்டியல் வெளியீடு
அதே போல் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 23 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 13 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

Tags: dmk election 2021 tn election admk election commision Election final canditates

தொடர்புடைய செய்திகள்

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

அதிமுக-பாமக கூட்டணியில் விரிசலா? பாமக வலுவான இடங்களில் அதிமுக தோல்வி எனச்சொல்லும் புகழேந்தி

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு