மேலும் அறிய

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

சீர்காழி அருகே வாணகிரி மீனவர் கிராமத்தில் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

சீர்காழி அருகே வாணகிரி மீனவர் கிராமத்தில் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் சுனாமி ஏற்பட்ட பின் நடைபெறும் மீட்பு பணிகள் குறித்த நிகழ்வு தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

சுனாமி 

லட்சக்கணக்கான மக்களை கொன்ற கொடிய இயற்கை பேரழிவைான ஆழிப் பேரலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 5 -ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

சுனாமி வரலாறு

ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை ஆபத்தை விட மிகவும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேரழிவில் ஏராளமான இறப்புகள் நிகழ்ந்தன, மேலும் 14 நாடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா மற்றும் இந்தியாவில் மட்டும் 2,27,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. 

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

விழிப்புணர்வு முயற்சி 

இதுகுறித்த விழிப்புணர்வை பரப்பும் முயற்சியாக, டிசம்பர் 2015-ம் ஆண்டு ஐநா பொதுச் சபை (UNGA) நவம்பர் 5 -ம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

50 சதவிகிதம் மக்கள் பாதிப்பில் உள்ளனர்

முக்கியமாக, மக்கள் மத்தியில் சுனாமி பற்றிய அறிவை உருவாக்குவதற்காகவும், தற்போது தாழ்வான தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 700 மில்லியன் மக்களுக்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஐநா அறிக்கையின்படி, புயல்கள், சுனாமிகள் மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளில் 50 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை வழங்கவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

பாதிப்பை குறைக்கும் நோக்கம்

சுனாமியுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து அனைவருக்கும் கற்பிப்பதற்காகவும், பேரிடரின் தாக்கங்களைக் குறைப்பதற்கான கொள்கைகள் மற்றும் உத்திகளைத் திட்டமிடுவதற்காகவும், விழுப்புணர்வு உள்ள மக்களை உருவாக்குவது முக்கியம். 2020 ஆம் ஆண்டில், உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 30 நாள் பிரச்சாரமாக கட்டமைக்கப்பட்டது. இதில், அறிவியல் நிபுணத்துவம், உள்நாட்டு அறிவு மற்றும் டிசம்பர் 2004 இன் சுனாமியின் நினைவகம் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

அதன் பிறகு தற்போது இந்த விழிப்புணர்வு நிகழ்வு பெரிய அளவில் நடைபெறுகிறது. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், உலக சுனாமி விழிப்புணர்வு தினத்திற்கான செய்தியை வழங்கியுள்ளார். சிக்கலான உலகளாவிய நெருக்கடி அதிகரித்து வருவதால் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும், சுனாமி அபாயத்தைக் குறைப்பதும், அனைத்துப் பேரிடர்களுக்கு எதிராகப் பாதிப்பை குறைப்பதும் முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமி தினம்

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியர் அரங்கில் இருந்து பேரிடர் பாதுகாப்பு துறையினர் சுனாமி குறித்த அறிவிப்பினை வழங்கிய பின்னர் வாணகிரி கிராமத்தில் வருவாய் துறையினர் மீனவர்களை பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, கடற்கரை பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக வாகனங்களில் வெளியேற்றிய நிலையில் சுனாமி அலை ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

பின்னர் சுனாமி அலையில் சிக்கி பாதிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் மீட்டு 108 வாகனத்தின் மூலம் பேரிடர் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு தயார் நிலையில் உள்ள மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீவிர முதல் உதவி சிகிச்சை அளிக்கின்றனர். இந்த காட்சிகள் ஒவ்வொன்றாக தத்ரூபமாக குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்றது. அதேபோல் சுனாமி அலையில் சிக்கி பாதிக்கப்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது அதன் பிறகு சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் மீட்கப்பட்ட அறிவிப்பும் இறுதியாக வழங்கப்பட்டு சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு முடிவடைந்தது.

மயிலாடுதுறையில் சுனாமி எச்சரிக்கையா? மின்னல் வேகத்தில் பேரிடர் மீட்பு படை - உண்மையில் நடந்தது இதுதான்

தொடர்ந்து போரிடர் பாதுகாப்பு துறையில் இருந்து எச்சரிக்கை அறிவிப்பு திரும்பப்பெறும் வரை பொதுமக்கள் அனைவரும் பேரிடர் மையங்களில் காத்திருக்கவும் அதன் பின்னர் வீடுகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், மருத்துவக் குழுவினர், கால்நடை பராமரிப்பு துறையினர்,வனத்துறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் வாணகிரி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
நடிகர் வடிவேலுவிற்கு சொந்த ஊர் மக்களே எதிர்ப்பு! குலதெய்வ கோயிலில் நடந்தது என்ன?
நடிகர் வடிவேலுவிற்கு சொந்த ஊர் மக்களே எதிர்ப்பு! குலதெய்வ கோயிலில் நடந்தது என்ன?
BJP Cadre Arrest: பாஜகவின் மன்மதன் - பெண்களுடன் உல்லாசம், வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல், தட்டி தூக்கிய போலீஸ்
BJP Cadre Arrest: பாஜகவின் மன்மதன் - பெண்களுடன் உல்லாசம், வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல், தட்டி தூக்கிய போலீஸ்
Embed widget