கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
சீர்காழி அருகே மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட குடும்பத்தினரை மலைத்தேனிக்கள் கூட்டமாக வந்து கடித்ததில் 7 பேர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி அருகே கோயிலுக்கு செல்லும் வழியில் மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட குடும்பத்தினரை மலைத்தேனிக்கள் கூட்டமாக வந்து கடித்ததில் 7 பேர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவெண்காடு கோயிலுக்கு வந்த குடும்பம்
நாமக்கல் மாவட்டம் பில்லா கவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் என்பவரின் மகன் 46 வயதான காளியப்பன். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் பிரசித்தி பெற்ற சிவாலயமான மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தேவாரப் பாடல் பெற்ற, புதனுக்கு உரிய தலமாக கருதப்படும், இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது தலமான, காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான, சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும்,
பணி நேரத்திற்கு பிறகு நோ டிஸ்டர்பன்ஸ்.. தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாக்க சூப்பர் சட்டம்.. செம்ம!
சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளும், நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும், இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படும் வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலுக்கு வந்துள்ளார்.
லட்சக்கணக்கானோர் பாதிப்பு: பி, சி பிரிவு பணிகளுக்கான வயதுவரம்பை 3 ஆண்டு உயர்த்தக் கோரிக்கை
கடித்த மலைத்தேனீக்கள்
வரும் வழியில் நாராயணபுரம் முத்து முனீஸ்வரர் கோயில் எதிரில் உள்ள ஆலமர நிழலில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் எதிர்பாராத விதமாக அவர்களை கடித்து தாக்கியுள்ளது. இதில் காளியப்பன் மற்றும் அவரது உறவினர்களான 62 வயதான உதயசந்திரன், 55 வயதான கலாவதி, 16 வயதான தினேஷ், 18 வயதான சுதர்சன், 25 வயதான ஜனா, தமிழரசி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர்.
The Goat: லியோவுக்கு வந்த சவால்... சமாளிக்குமா தி கோட்...? கொதித்து போன விஜய் ரசிகர்கள்
மருத்துவமனையில் அனுமதி
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திருவெண்காடு காவல்துறையினர் பரிந்துரையின் பேரில் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மரத்திலிருந்து 2 மலைத்தேனிக்களின் கூடுகளை அழித்து அப்புறப்படுத்தினர். கோயிலுக்கு வழிபாடு செய்ய வந்த குடும்பத்தினரை தேனிகள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.