மேலும் அறிய

The Goat: லியோவுக்கு வந்த சவால்... சமாளிக்குமா தி கோட்...? கொதித்து போன விஜய் ரசிகர்கள்

தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இந்தி ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

தி கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா , சினேகா , லைலா ,மோகன் , மீனாக்‌ஷி செளதரி , வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. 

தி கோட் படத்திற்கு சென்ஸார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின்  நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் . படம் வெளியான இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் இந்தி ரிலீஸ் குறித்து பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன.

இந்தியில் வெளியாகுமா தி கோட்

படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் துவங்கப்பட இருக்கின்றன. தி கோட் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் ஒருபக்கம் இருந்து வருகின்றன. அதே நேரம் இந்தியில் படத்திற்கு மிக குறைவாகவே படக்குழு ப்ரோமோஷன் செய்துள்ளது. இதனால் இந்தி டப்பிங்கில் படம் வெளியாக வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதனால் வட மாநிலங்களில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.முன்னதாக விஜயின் லியோ படம் பான் இந்திய அளவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் படத்திற்கு வட மாநிலங்களில் மிக குறைவாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் படத்தில் இந்தி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது இதே நிலைமை கோட் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 

தி கோட் படத்தில் இந்தி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வருவதாகவும் சரியான முறையில் ப்ரோமோஷன் செய்தால் படம் நிச்சயம் வட மாநிலங்களில் பெரியளவில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது WeWantGOATHindiInMultiplex என்கிற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  இது குறித்து படக்குழுவினர் என்ன சொல்லப் போகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கல் ஆவலாக காத்திருக்கிறார்கள். 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Karthigai Deepam: மகேஷின் மட்டமான புத்தி.. தப்புவாளா சுவாதி? சதீஷை கண்டுபிடித்தாளா ரேவதி?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
Embed widget