Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: 2025ம் ஆண்டு ரோகித் சர்மாவிற்கு எப்படி அமைந்தது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இந்திய அணிக்காக நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டனர். இதையடுத்து, இவர்கள் இருவரும் அடுத்தாண்டு நியூசிலாந்து தொடரிலே இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர்.
ரோகித்சர்மாவிற்கு எப்படி?
2025ம் ஆண்டு ரோகித் சர்மாவிற்கு எப்படி அமைந்தது? என்பதை கீழே காணலாம்.
ரோகித் சர்மா நடப்பாண்டில் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் ஆடவில்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ரோகித் சர்மா நடப்பாண்டில் மொத்தம் 14 ஒருநாள் இன்னிங்சில் ஆடி 650 ரன்களை விளாசியுள்ளார். சராசரியா 50 வைத்துள்ளார். 100.46 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்துள்ளார். 4 சதங்கள், 2 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
2025ம் ஆண்டில் ரோகித் சர்மா:
2 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக (நாக்பூர்)
119 ரன்கள் - இங்கிலாந்திற்கு எதிராக, (கட்டாக்)
1 ரன் - இங்கிலாந்திற்கு எதிராக (அகமதாபாத்)
41 ரன்கள் - வங்கதேசத்திற்கு எதிராக (துபாய்)
20 ரன்கள் - பாகிஸ்தானுக்கு எதிராக ( துபாய்)
15 ரன்கள் - நியூசிலாந்திற்கு எதிராக ( துபாய்)
28 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( துபாய்)
76 ரன்கள் - நியூசிலாந்திற்கு எதிராக ( துபாய்)
8 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( பெர்த்)
73 ரன்கள் - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ( அடிலெய்ட்)
121 ரன்கள் - ஆஸ்திரலியாவிற்கு எதிராக ( சிட்னி)
57 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராஞ்சி)
14 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( ராய்ப்பூர்)
75 ரன்கள் - தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ( விசாகப்பட்டினம்)
இதில் இங்கிலாந்திற்கு எதிராக கட்டாக்கிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிட்னியிலும் சதம் விளாசியுள்ளார். சிட்னி போட்டியில் ஆட்டமிழக்காமல் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி:
இந்தாண்டு ரோகித் சர்மாவிற்கு கடினமாக ஆண்டாகவும் அமைந்துள்ளது. ஒரு கேப்டனாக அவர் சாம்பியன்ஸ் டிராபி வென்று காெடுத்து சாதித்தாலும், ஒரு வீரராக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும், அவரிடம் இருந்து அவரது கேப்டன்சியையும் அணி நிர்வாகம் பறித்தது.
டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை கேப்டனாக வென்ற ரோகித் சர்மா ஒருநாள் உலகக்கோப்பையையும் வெல்ல ஆர்வமாக இருந்த சூழலில், அவரது கேப்டன்சி பறிக்கப்பட்டது அவருக்கு பெரும் அதிருப்தியை உண்டாக்கியது. 2027ம் ஆண்டு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு உடல் எடையை குறைத்து தனது அதிரடியான ஃபார்மிற்கு ரோகித் சர்மா திரும்பியுள்ளார். அதிக வயதில் சர்வதேச ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய வீரர், சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்தியர் ஆகிய சாதனைகளையும் ரோகித் சர்மா இந்தாண்டு படைத்தார்.




















