மேலும் அறிய

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்

Goa Cylinder Blast: கோவாவில் இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 23 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Goa Cylinder Blast: கோவாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில், உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா - சிலிண்டர் வெடித்து கோர விபத்து

வடக்கு கோவாவில் உள்ள அர்போரா கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேனில் இந்த மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதில் பலியானவர்களில் பெரும்பாலானோர், சமையலறை பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 முதல் 4 பேர் சுற்றுலா பயணிகள் என தெரிவித்துள்ளார். . பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்தது என்ன?

அதிகாலை 1:00 மணியளவில் சமையலறை பகுதிக்கு அருகில் பலத்த சத்தத்துடன் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட தீயானது மளமளவென பரவி சில நொடிகளில் முழு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். அந்த நேரத்தில் கிளப்பிற்குள் வழக்கமான தயாரிப்பு மற்றும் மூடும் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், இதனால் பொதுமக்கள் அதிகம் இல்லை என்றும் கூறப்படுகிறது. எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

23 பேர் பலியான சோகம்:

இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், அதற்குள் உயிரிழப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.  விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று முதல் நான்கு சுற்றுலாப் பயணிகளும், க்ளப்பின் ஊழியர்கள் 19 பேரும் அடங்குவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 50 பேர் காயமடைந்து தற்போது கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவு:

இரவு விடுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது க்ளப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள், எரிவாயு இணைப்பு அமைப்புகள் மற்றும் அதன் அவசரகால வெளியேறும் திட்டம் ஆகியவை ஏதேனும் மீறல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க விசாரணையில் ஆராயப்படும் என்று காவல்துறை இயக்குநர் ஜெனரல் கூறியுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகள் பின்பற்றப்பட்டதா என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார் 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget