மயிலாடுதுறை அருகே மருத்துவராக மாறிய செவிலியர்கள் - அச்சத்தில் பொதுமக்கள்
காத்திருப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆறுமாத காலமாக மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே காத்திருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆறுமாத காலமாக மருத்துவர்கள் பணியில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஏழை எளிய மக்கள் தங்கள் உடல் நலம் சார்ந்த மருத்துவ சிகிச்சை பெறவும் அவர்களின் உயிர் காக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த காலங்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவர்கள் இருந்து இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இப்பகுதியை சுற்றி உள்ள செம்பதனிருப்பு, நாங்கூர், மேலச்சாலை, மேலநாங்கூர், தேத்தாகுடி, பாடசாலை, அண்ணன்கோயில் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவசர காலங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையதையை நம்பியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக இங்கு மருத்துவர்கள் இல்லாததால், அங்கு பணிபுரியும் செவிலியர்களே, மருத்துவராக மாறி நோயாளிகளின் குறைகளை கேட்டு மருத்து மாத்திரைகளை வழங்கி வருகிறது. மருத்துவர்களே பல இடங்களில் தவறான சிகிச்சை அளித்து உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வரும் நிலையில் இங்கு செவிலியர்கள் மருத்துவம் பார்ப்பதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தும், அச்சமடைந்தும் வருகின்றனர்.
இதனால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீர்காழி அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை உள்ளதாகவும், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்ள தாய்மார்கள், முதியவர்கள் என பலதரபட்ட மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை உடனடியாக பேர் கால அடிப்படையில் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல் பட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
GATE 2024 Admit Card: பொறியியல் கேட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு: பெறுவது எப்படி?