மேலும் அறிய

GATE 2024 Admit Card: பொறியியல் கேட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு: பெறுவது எப்படி?

2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) பொறியியல் நுழைவுத் தேர்வை ஐஐஎஸ்சி பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு வெளியாகி உள்ளது.

2024ஆம் ஆண்டு கேட் (GATE) தேர்வுக்கான அனுமதிச் சீட்டை ஐஐஎஸ்சி பெங்களூரு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2024ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 2024ஆம் ஆண்டுக்கான கேட் (GATE) தேர்வை ஐஐஎஸ்சி பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.24ஆம் தேதி தொடங்கி, அக்.20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் நவம்பர் 7 முதல் 11ஆம் தேதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்தனர். 

 அனுமதிச் சீட்டு வெளியீடு

கேட் தேர்வு இந்தியா முழுவதும் பிப்ரவரி 3, 4, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ள தேர்வில், முதல் ஷிஃப்ட் கால 9.30 முதல் 12.30 மணி வரையிலும் 2ஆம் ஷிஃப்ட் 2.30 முதல் 5.30 மணி வரையிலும் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது அனுமதிச் சீட்டை ஐஐஎஸ்சி பெங்களூரு வெளியிட்டுள்ளது.

தேர்வு மையங்கள் 

நாடு முழுவதும் இந்தியாவுக்குள் மட்டுமே கேட் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வை நடத்தும் ஐஐஎஸ்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே உள்ள தேர்வர்கள், இந்தியாவுக்கு வந்து தேர்வை எழுதலாம். எனினும் போக்குவரத்து, தங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகளை அவர்களை செய்துகொள்ள வேண்டும் என்று ஐஐஎஸ்சி பெங்களூரு தெரிவித்துள்ளது.

அனுமதிச் சீட்டைப் பெறுவது எப்படி?

* தேர்வர்கள்https://goaps.iisc.ac.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* அதில் தேர்வர்கள், தங்களின் இ- மெயில் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

* அதில் உள்ளே சென்று, தேர்வர்கள் தங்களின் அனுமதிச் சீட்டைப் பெறலாம்.

தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்து விரிவாக அறிய https://gate2024.iisc.ac.in/exam-cities/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

தேர்வர்கள் https://gate2024.iisc.ac.in/important-dates/  என்ற இணைப்பை க்ளிக் செய்து, முக்கியத் தேதிகளை அறிந்துகொள்ளலாம். 

உதவி எண்கள்: 080 2293 3711 / 3712 / 3713 / 3714

கூடுதல் விவரங்களுக்கு: gate2024.iisc.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget