மேலும் அறிய

மயிலாடுதுறையில் இத்தனை பேரிடம் துப்பாக்கியா...! என்னங்க சொல்றீங்க..?

மயிலாடுதுறை சட்டமன்றத் தேர்தல் 2026 நடத்தை விதிமுறை அறிவிப்பை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை சட்டமன்றத் தேர்தல் 2026 நடத்தை விதிமுறை அறிவிப்பை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 99 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 99 துப்பாக்கிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பும் நடத்தை விதிகளும்

இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் அறிவித்தது. அதன்படி, வருகின்ற 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகளும், பல்வேறு கட்டுப்பாடுகளும் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்ய காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு: பின்னணி தகவல் 

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமான சூழலில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பதை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக, சுய பாதுகாப்பிற்காக அரசிடம் உரிய உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள், அவற்றை அருகில் உள்ள காவல் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் புள்ளிவிவரங்களின்படி

 * மாவட்டம் முழுவதும் மொத்தம் 129 நபர்கள் அரசிடம் உரிய உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

* தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இதுவரை 95 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

* மேலும் 4 துப்பாக்கிகள் ஆயுதக் கிடங்குகளில் (Armories) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

*மொத்தமாக இதுவரை 99 துப்பாக்கிகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விலக்கு கோருபவர்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை

மீதமுள்ள 30 துப்பாக்கிகளின் உரிமையாளர்கள், தங்களின் தொழில்முறை பாதுகாப்பு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக துப்பாக்கிகளை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறுகையில்:

 "விலக்கு கோரி பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆலோசனைக் குழுவின் (District Scrutiny Committee) பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். முறையான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், அக்குழுவின் முடிவின் அடிப்படையில் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தற்போது காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள 99 துப்பாக்கிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த பின்னர், இந்தத் துப்பாக்கிகள் அனைத்தும் அந்தந்த உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அமைதியான முறையில் தேர்தலை நடத்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் எஸ்பி கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதி பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  மீதம் உள்ள துப்பாக்கிகளையும்  விரைந்து ஒப்படைக்குமாறு காவல்துறையினர் அறிவுத்தியுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget