மேலும் அறிய

மயிலாடுதுறை மீனவர்கள் கவனத்திற்கு : உங்கள் உறவினர்கள் ஈரானில் சிக்கியுள்ளார்களா? விவரங்களை உடனே சமர்ப்பியுங்கள்...

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் உள்ளிட்ட மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் மீனவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழல் காரணமாக, ஈரான் நாட்டில் தங்கியிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

போர் சூழல்

தற்போது வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் அசாதாரண போர்ச் சூழ்நிலை காரணமாக, அங்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, ஈரான் நாட்டில் தங்கியுள்ள தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப உதவி கோரி வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, ஈரானில் சிக்கியுள்ள சுமார் 595 மீனவர்களின் பட்டியல் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் இடம்பெற்றுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணிக்கையில் முரண்பாடு - சரிபார்ப்பு அவசியம்

இருப்பினும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வப் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 490 மீனவர்களின் விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மாநில அரசு மற்றும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களுக்கு இடையே உள்ள இந்த முரண்பாடுகளைக் களைந்து, உண்மையில் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாக உறுதிப்படுத்துவது தற்போதைய நிலையில் மிகவும் அவசியமாகிறது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எவரேனும் தற்போது ஈரானில் தங்கியிருந்தால், அவர்களின் விவரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள்

ஈரானில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பின்வரும் அவசர காலத் தொடர்பு எண்களை மீனவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம்:

*தூதரக உதவி எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359

*மின்னஞ்சல் முகவரி: cons.tehran@mea.gov.in

மாவட்ட அளவிலான உதவி மையங்கள்:

மீனவர்களின் விவரங்களைச் சரிபார்க்கவும், கூடுதல் தகவல்களை வழங்கவும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

அதன் விவரங்கள் பின்வருமாறு

* உதவி இயக்குநர் அலுவலகம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.41/A, பெஸ்ட் பள்ளி எதிரில், சீர்காழி- 609111. 04364-271455 

* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், மீன்பிடித் துறைமுகம், பழையார் - 79044 28026 

* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் அலுவலகம், மீன்பிடித் துறைமுகம், தரங்கம்பாடி - 63698 64872 

ஆட்சியரின் வேண்டுகோள்:

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "போர்ச் சூழலில் சிக்கியுள்ள நமது மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்பதே அரசின் முதன்மை நோக்கமாகும். எனவே, மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஈரானில் உள்ள மீனவர்களின் தற்போதைய நிலை குறித்த சரியான தகவல்களை மேற்கூறிய அலுவலகங்களில் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தூதரகத்தின் மூலம் உரிய உதவிகளை வழங்கவும் இயலும்," எனத் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட மீனவக் கிராமங்களில் உள்ள சங்கங்களும், பொதுமக்களும் இந்தத் தகவலை உரியவர்களுக்குக் கொண்டு சேர்த்து, முழுமையான விவரங்களை வழங்க ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget