மேலும் அறிய

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை வனத்துறையினர் சரியான முறையில் சேகரிப்பதில் என்ற குற்றச்சாட்டு சூழலில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கூழையார் மீனவர் கிராமத்தில் கடற்கரையோரம் வனத்துறை சார்பில் கடல் ஆமை முட்டை பாதுகாப்பகம் மற்றும் முட்டை பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் கடலோரங்களில் இருந்து ஆமை முட்டைகள் சேகரித்து அவற்றை பாதுகாத்து, குஞ்சு பொறித்த பின் அவை கடலில் விட்டு வருகின்றனர்.அந்தவகையில் இந்தாண்டு சேகரித்து குஞ்சி பொறித்த 1000 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

அரியவகை ஆமை இனம்:

அரியவகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வாசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு படை எடுக்கின்றனர். தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 200 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக 45 நாட்கள் வைத்து அவைகள் குஞ்சி பொறித்த உடன் கடலில் பாதுகாப்பாக விட்டுவருகின்றனர். 

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

30 ஆயிரம் முட்டைகள் சேமிப்பு:

இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டம் பழையார் முதல் தரங்கம்பாடி வரை கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு சென்ற 30,000 ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவைகள் கூழையார் கடல்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு முட்டை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதற்கட்டமாக முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது அரியவகை ஆமை இனமான 1000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு படையெடுக்கும் ஆலிவ் ரெட்லி:

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே இப்போது அழிவின் விளிம்பில்தான் இருக்கின்றன. அதில் இந்த ஆலிவ் ரெட்லி ஆமைகள் சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமைகள் எந்த இடத்தில் பிறக்கின்றனவோ, அங்கேதான் முட்டைகளை இடும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் ஓடிசா மாநிலக் கரையோரங்களில் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன. ஆலிவ் ரெட்லி ஆமைகள் மீனவர்களின் நண்பனாகப் பார்க்கப்படுகின்றன.

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

இவை அழிந்தால் நிச்சயம் மீனவர்களுக்கே இழப்புதான். இவைதான் கடலில் இருக்கும் சொறிய மீன்களை உண்ணும். எனவே இவை இருந்தால், கடலின் ஆரோக்கியமான சூழல் கெடாமல் இருக்கும். ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் தான் அதிகமாக இறந்து கரை ஒதுங்கும். இதற்கு காரணம் இழுவை மீன்பிடி கப்பல்களின் வலைகளில் இவை சிக்குவதுதான் என்றும், ஒவ்வொரு ஆமையும் சுமார் 30 நிமிஷங்களுக்கு ஒருமுறை, சுவாசிப்பதற்காக கடலின் மேற்பரப்பிற்கு வரும். அப்படி வந்து சுவாசிக்க முடியாத சமயங்களில்தான் அவை உயிரிழக்கின்றன என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். 

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

அரியவகை ஆமைகளை காக்க தவறும் வனத்துறை: 

ஆமை குஞ்சு முட்டைகளை இரவு 11 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை இரவு நேரங்களில் மட்டும் சேகரிக்க படுவதால், மயிலாடுதுறை கடலோரப் பகுதிகளில் வனத்துறையினர் இரவு நேரங்களில் அவ்வாறு சென்று சரியான முறையில் முட்டைகள் சேமிக்கப்படுவதில்லை என்றும், இதனால் ஆமை குஞ்சு முட்டைகள் நாய், நரி மற்றும் ஒரு சில மனிதர்களால் சூறையாட படுவதாகவும், சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வரும் காலங்களிலாவது வனத்துறையினர் இரவு நேரங்களில் சரியான முறையில் கடற்கரை பகுதிகளில் ரோந்து சென்று அழிந்து வரும் ஆமை இனமான ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சேகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலிவ் ரெட்லி சேகரிப்பில் அலட்சியம் காட்டும் வனத்துறை - சூழலில் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

மேலும் இதுதொடர்பாக செயல்படுகளை பொதுமக்கள் அறிந்துகொண்டு இந்த ஆமை இனங்களை காக்க இவைகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் செய்திகளாக ஒளிபரப்பு செய்யப்படும், ஆனால் மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்காமல் இருப்பதால் ஆமை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் சென்றடையாத நிலை இருந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget