மேலும் அறிய

மயிலாடுதுறையில் தலைப்பாகை, பாசி மணி அணிவித்து அண்ணாமலையை வரவேற்ற மக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுகள் ஆட்சி சாதனைகளை தமிழ்நாடு முழுக்க எடுத்து சொல்லும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" எனும் பெயரில் நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் 18 -ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணம் ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த  நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் தலைப்பாகை, பாசி மணி அணிவித்து அண்ணாமலையை வரவேற்ற மக்கள்

நகரப் பகுதியில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிமீ தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணமாக வடிவமைக்கப்பட்டது. பல்வேறு சூழ்நிலைகளை கடந்து அண்ணாமலை யாத்திரையை செயல்படுத்தி வந்தார். பல கட்டங்களை கடந்து, கடந்த ஜனவரி 20 -ஆம் தேதி நடை பயணம் நிறைவு பெறுவதாக இருந்தது. ஆனால் இடையில் பல்வேறு காரணங்களுக்காக என் மண் என் மக்கள் யாத்திரை பயணம் தடைப்பட்டதால் தற்போது பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த நடை பயணத்தை முடிக்க தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் தலைப்பாகை, பாசி மணி அணிவித்து அண்ணாமலையை வரவேற்ற மக்கள்

இந்நிலையில், நேற்று 78வது நாளாக தனது யாத்திரை பயணத்தை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி மாலை 5 மணியளவில் தொடங்கினார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ளார். முன்னதாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தனது நடை பயணத்தை பூக்கடை தெருவில் இருந்து தொடங்கி மயிலாடுதுறை மணி குண்டு அருகில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் செம்பனார்கோயில் கடைவீதியில் தனது பயணத்தை மேற்கொண்டு இன்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.

Governor RN Ravi: நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது - ஆளுநர் ஆர்.என்.ரவி

மயிலாடுதுறையில் தலைப்பாகை, பாசி மணி அணிவித்து அண்ணாமலையை வரவேற்ற மக்கள்

மீண்டும் இன்று 79 வது நாளாக தனது என் மண் என் மக்கள் யாத்திரை பயணத்தை காலை சீர்காழியில் தொடங்கி கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், திட்டக்குடியில் மேற்கொள்ள இருக்கிறார். மயிலாடுதுறை அவருக்கு ஏராளமானோர் மக்கள் திரண்டு உற்சாகம் வரவேற்பு அளித்தனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமையில் பாஜகவினர் அண்ணாமலைக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். அதே ஜெயின் சமூகத்தினர் அவருக்கு தலைப்பாகை சூடியும், நரிக்குறவர் இன மக்கள் பாசி மணி அணிவித்தும்   வரவேற்றனர்.

CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

மயிலாடுதுறையில் தலைப்பாகை, பாசி மணி அணிவித்து அண்ணாமலையை வரவேற்ற மக்கள்

வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் அவருடன் கை குலுக்கியும், புகைப்படம், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக திருவிடைமருதூரில் தருமபுரம் ஆதீன கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

CM MK Stalin: "அப்போ வாடா பாலு, போடா பாலுனு சொல்வேன்! இப்போ" மேடையில் மனம் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்

Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!

Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
PM Modi's nomination: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்
Mumbai Bill Board Accident: மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
மும்பையில் புயலில் சரிந்து விழுந்த ராட்சத பேனர்.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Lok Sabha Election: 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஆசைக்காட்டி ரூ.4.13 லட்சம் மோசடி: தட்டித் தூக்கிய சைபர் க்ரைம் போலீசார்! எப்படி?

Sushil Kumar Modi: பாஜகவிற்கு பேரிழப்பு..! பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் குமார் மோடி காலமானார்..

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!

IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!

Embed widget