மேலும் அறிய

CM Stalin: "பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்” தேர்தலுக்கு அச்சாரம் போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin: நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்கள்”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அதில், டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். உரிமைக்குரல், பாதை மாறா பயணம் உள்ளிட்ட 4 நூல்களை வெளியிட்டார். இந்ந நிலையில், நூல் வெளியீட்டு விழா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 அதன்படி, ”நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு அவர்களைப் போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"ராமர் கோயிலை கட்டி திசை திருப்ப பாஜக முயற்சி” 

முன்னதாக மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல் இறுதியில் கோயில் கட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக. மக்களை திசை திருப்புவதற்காகவே கட்டி முடிக்கப்படாத கோயிலை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோயிலை அவசர அவசரமாக திறந்து எதையோ சாதித்ததுபோல் காட்டிக்கு கொள்கிறார்கள்.  இதுபோன்ற திசை திருப்ப தந்திரத்திற்கு மக்கள் சரியான பாடங்களை கொடுப்பார்கள் இது  உறுதி. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. யார்  ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெற உள்ள தேர்தல் இது.

"இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை”

சென்னை, தென்மாவட்டங்களில் பேரிடர் பாதிப்புக்குக் கூட  இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜகவினால் சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை எதுவுமில்லை" என்றார்.  மேலும், "இந்தியாவின் எதிர்காலத்தை எல்லோரும் மனதில் வைத்து கடமையாற்ற வேண்டும் தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணி அமைத்திருக்கிற மாதிரி இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களை காப்பாற்ற தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு மத்திய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கு டி.ஆர் பாலு அவர்கள் தயாராக வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் படிக்க

பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget