மேலும் அறிய

CM MK Stalin: "அப்போ வாடா பாலு, போடா பாலுனு சொல்வேன்! இப்போ" மேடையில் மனம் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்

CM MK Stalin: மக்களவை உறுப்பினரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய பாதை மாறா பயணம் புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.

திமுகவின் முதல்நிலைத் தலைவர்களில் ஒருவரும் திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு புத்தகம்  எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா புத்தக வெளியீட்டு விழா அண்ணா அறிவாலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், "

17 வயதில் தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர் தற்போது அவருக்கு வயது 80, எனக்கு வயது 70, இன்று வரை ஒரே கொடி ஒரே இயக்கம் என்று கொள்கை பிடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறார் பாலு...

முதல் பாகத்தில் அரசியல் வளர்ந்தது பற்றியும் கழக வளர்ச்சிக்கு தொண்டாற்றியது பற்றியும் இரண்டாவது பாகத்தில் அவரால் இந்திய நாடும் நமது தமிழ்நாடும் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தது என்று விரிவாக எழுதியிருக்கிறார்...

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக ஒன்றியத்தில் அமைச்சராக இருந்திருக்கிறார்...

தமிழ்நாட்டில் ஓடும் தங்க நாசாலையாக இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும் பாலமாக இருந்தாலும் இது அனைத்தும் பாலுவிற்கான மகுடங்கள்...

12 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சராக இருந்த பாலு மூன்று முக்கியமான துறைகளில் முத்திரை படைத்தார்...

ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு மட்டும் 22 ஆயிரத்து 758 கோடி மதிப்பில் 15 பெரிய பெட்ரோலிய திட்டங்களை கொண்டு வந்தார்...

சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது தேசிய பல்வகை உயிரின ஆணையத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்...

கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது 56 ஆயிரத்து 644 கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தது...

தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 335 பாலங்களைக் கட்டியது பாலுவின்  மிகப் பெரிய சாதனை...

ஆனால் இதையெல்லாம் விட பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்னு உண்டு அதுதான் பேரறிஞர் அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம்...

தலைவர் கலைஞர் வற்புறுத்தலால் இந்த திட்டம் 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சியின் காரணமாக அந்த திட்டம் முடக்கப்பட்டது அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக அது அமைந்திருக்கும் இத்தகைய சாதனை கலைஞ்சமாக இருக்கிறது டி ஆர் பாலு அவர்கள் எழுதியிருக்க கூடிய வாழ்க்கை வரலாறு...

ஈழத் தமிழர்களுக்காக திமுக ஆற்றிய பணிகளையும் அதனால் ஆட்சியை இழந்த தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது....


இனப்படுகொலை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வலியுறுத்தி ஐக்கிய நாடு அவைகளிடம் கோரிக்கை மனுவை என்னையும் டி ஆர் பாலு அவர்களையும் தான் கலைஞர் அனுப்பி வைத்தார்...

ஐநா துணை பொது செயலாளர் யான் யான் ஆசானையும்  மனித உரிமை ஆணையத்தின் நவநீதகிருஷ்ணனையும் சந்தித்து வீடியோ தமிழர்களுக்காக வாதித்தோம் இது தொடர்பாக பாலு இந்த நூல்களில் முழுமையாக எழுதியுள்ளார்...

கழகத்தையும் என்னையும் பாலுவையம் பிரித்து வரலாற்றை யாராலும் எழுத முடியாது...

நெருக்கடி காலம் முன்பு இளைஞர் திமுக கோபாலபுரம் பகுதியில் நான் தொடங்கின நேரத்தில் எனக்கு துணையாக இருந்தவர்....

அவரபோது அண்ணா ஆர்ட்ஸ் அகாடமி என்ற நிறுவனத்தை பொதுவாக நடத்திக் கொண்டிருந்தார் கழகத்திற்கு துணை செய்யக் கூடிய வகையில் தான் நடத்திக் கொண்டு இருந்தார் அப்போது தான் எனக்கும் அவருக்கும் முதல் முதலில் அறிமுகம் கிடைத்தது அப்போது அறிமுகம் கிடைத்த பொழுது வாங்க போங்க எப்படி இருக்கீங்க என்று தான் நானும் பேசுவேன் அவரும் பேசுவார் அது போகப் போக என்னப்பா எப்படி இருக்க என்று இருந்தது பிறகு வாடா போடா என்று சொல்லும் அளவிற்கு மாறியது...

ஆனால் தற்போது பார்த்தீங்களா நான் தலைவர் கட்சியின் தலைவர் அவர் நாடாளுமன்ற கழக குழு தலைவர் தற்போது அவரால் சொல்ல முடியுமா அப்படி சொன்னால் நீங்கள் விட்டு விடுவீர்களா எதற்காக சொல்கிறேன் என்றால் அந்த அளவிற்கு இருட்டறை கலந்தவர்களாக நாங்கள் இருந்தோம்...

பாலுவின் வரலாற்று புத்தகம் மட்டுமல்ல மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம் பாஜகவை வீலுத்த போகின்ற இந்தியா  கூட்டணியோட உருவாக்கத்தில் பாலுவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது....

இந்தியாவின் எதிர்காலத்தை எல்லோரும் மனதில் வைத்து கடமையாற்ற வேண்டும்...

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சியில் அமர கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தல்...

கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யாமல் பேரிடர் பாதிப்புக்கு கூட நிதி ஒதுக்காமல் இறுதி காலத்தில் ஒரு கோவிலைக் கட்டி மக்களை திசை திருப்ப பார்க்கிறது பாஜக தலைமை.

தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜகவிற்கு மக்களை சந்தித்து சொல்ல சாதனை எதுவும் இல்லை அதனால்தான் முழுமையாக கட்டி முடிக்காத கோவிலை அவசர அவசரமாக திறந்து எதையோ சாதித்ததாக காட்டிக் கொள்கிறார்கள் இதுபோன்ற திசை திருப்பம் தந்திரத்திற்கு மக்கள் சரியான பாடங்களை கொடுப்பார்கள் இது  உறுதி.

அனைத்து வகையிலும் மக்களை நசுக்கின ஆட்சி பாஜக அந்த கோபம் மக்கள் மனதில் உள்ளது தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணி அமைத்திருக்கிற மாதிரி இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களை காப்பாற்ற தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம் அதற்கு டி ஆர் பாலு அவர்கள் தயாராக வேண்டும்.

இந்த பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு இந்த பாதை மாறா பயணத்தோடு அடுத்தடுத்த புத்தகங்களை எழுதும் வேலைகள் நம்முடைய டி ஆர் பாலு அவர்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் முன்னேற்ற வரலாற்றைச் சொல்ல திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வரலாற்றை திராவிட மாடலின் அரசின் வரலாற்றை தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்” என பேசினார். 

.

 

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், நொடிக்கு ஆயிரம் பொய்களைத் திட்டமிட்டு உருவாக்கும் இனப் பகைவர்களின் அவதூறு பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். தமிழர்கள் தலைநிமிரக் காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு டி.ஆர்.பாலு போல், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைவழிப் பயணத்தை எழுத வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
Embed widget