EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ள நிலையில், கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

நெருங்கும் தேர்தல் - களத்தில் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியையும் ரகசியமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதா.? அல்லது புதுமுகத்திற்கு வாய்ப்பா.? என ஆராய்ந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேரளாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
கேரளா தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
கேரளாவில் வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரள மாநிலத்தில் 9.12.2025, 11.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கீழ்க்காணும் பதவிகளுக்கு வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம்
திருவனந்தபுரம் மாநகராட்சி 98-ஆவது வார்டு- S. வெங்கடேஷ்பாபு
நெய்யாற்றிங்கரா சட்டமன்றத் தொகுதி:
நெய்யாற்றிங்கரா நகராட்சி 14-ஆவது வார்டு- K. கலா
இடுக்கி மாவட்டம்
தேவிகுளம் சட்டமன்றத் தொகுதி,மறையூர் ஊராட்சி 3-ஆவது வார்டு -சனில்
4-ஆவது வார்டு- செல்வி கணேசன்
மூணார் ஊராட்சி 13-ஆவது வார்டு- K. பவுன்ராஜ்
18-ஆவது வார்டு- P.K. முருகன்
தேவிகுளம் ஊராட்சி 14-ஆவது வார்டு- K. முருகையா
15-ஆவது வார்டு- R. கிட்னம்மா
வட்டவடை ஊராட்சி 4-ஆவது வார்டு- R. சத்தியா
சின்னகானல் ஊராட்சி 4-ஆவது வார்டு- A. உதயகுமார்
11-ஆவது வார்டு- R. மல்லிகா
பீர்மேடு சட்டமன்றத் தொகுதி
குமிழி ஊராட்சி 22-ஆவது வார்டு-P. எஸ்தர்
பீர்மேடு ஊராட்சி 2-ஆவது வார்டு-C.M. ஜாக்சன்
இடுக்கி மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள்:
2-ஆவது வார்டு- M. செல்லதுரை
3-ஆவது வார்டு- S. துரைப்பாண்டி
பாலக்காடு மாவட்டம் : சித்தூர் சட்டமன்றத் தொகுதி
வடகரப்பதி ஊராட்சி 10-ஆவது வார்டு- வல்சம்மா
11-ஆவது வார்டு- K. கலாதரன்
நெம்மாரா சட்டமன்றத் தொகுதி
நெம்மாரா ஊராட்சி 2-ஆவது வார்டு- N. தேவதாஸ்
9-ஆவது வார்டு- H. லத்தீப்
22-ஆவது வார்டு- A. செல்வராஜ்
மன்னார்காடு சட்டமன்றத் தொகுதி
அகழி ஊராட்சி 5-ஆவது வார்டு- பழனி
6-ஆவது வார்டு- சுருதி
12-ஆவது வார்டு-M. தீபா
புதூர் ஊராட்சி 14-ஆவது வார்டு- J. பிரின்சி
சோலையூர் ஊராட்சி 4-ஆவது வார்டு- N. சுப்பிரமணியன்
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் ஒன்றிணைந்து, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில், சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.





















