மேலும் அறிய

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

புதன் ஸ்தலமான திருவெண்காடில் 12 ஆண்டுகள் பூர்த்தியடையாத நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடைபெறு உள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ஆலயமானதும், சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சொந்த ஊர் கோயில் என்பதால்   12 ஆண்டுகள் நிறைவேறாத நிலையில் தமிழக அரசு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செய்து நடத்தி வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

கோயிலின் பல்வேறு சிறப்புகள் 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.  

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

ஜுலை 7 குடமுழுக்கு 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா வருகின்ற ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற 9 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பி உள்ளது. பொதுவாக கோயில்களில்  பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயில் குடமுழுக்கு நடைபெறும். மேலும் சில தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகளை கடந்து பல கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். பன்னிரண்டு ஆண்டுகள் முன்பு கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றதாக தகவல்கள் இல்லை.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் 

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். ஒரு மாமாங்கம் என்பது 12 ஆண்டுகளைக் குறிக்கும். தேவதா ஆராதனைக்கு குரு பகவானை பிரதானமாக கணக்கில் கொள்வார்கள். குரு பகவான் சராசரியாக ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிப்பார். 12 ராசிகளையும் முழுமையாக ஒருமுறை சுற்றி வருவதற்கு 12 ஆண்டுகள் காலம் ஆகும். நாம் வாழுகின்ற இந்த அண்டம்தான் 12 ராசி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக குருபகவான் இந்த அண்டத்தை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒரு மாமாங்கம் என்பது தேவதைகளை ஆராதனை செய்வதற்கான பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ளும் கால அளவாக வைத்துக் கொள்ளலாம்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

மூலவர் விக்கிரகத்திற்கு அஷ்டபந்தனம் சாற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்களில் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். அஷ்டபந்தன மருந்து ஆனது 12 ஆண்டுகளில் தனது சக்தியை இழந்துவிடும் என்பதால் அதனை எடுத்துவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதற்கு ஜீர்ணோத்தாரணம் என்று பெயர். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்தினை புனருத்தாரணம் என்று அழைப்பர். பெரிய ஆலயங்களில் வெள்ளியை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ரஜிதபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடக்கும். மிகப்பெரிய ஆலயங்களில் தங்கத்தை உருக்கி பந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இதற்கு ஸ்வர்ணபந்தனம் என்று பெயர். இந்த ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது என்பது மிகவும் விசேஷமானது.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

எழுந்துள்ள சந்தேகங்கள் 

இந்நிலையில் தமிழகத்தில் ஏராளமான ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்கு நிதி ஒதுக்கப்படாமல் பாழடைந்து வரும் நிலையில், பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவேறாத திருவெண்காடு கோயிலில் அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடைபெறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அதுமட்டுமன்றி கோயிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலையாக போடப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் முக்கிய காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துர்கா ஸ்டாலின் தந்தையார் இல்லம் திருவெண்காடு கீழ ரத வீதியில் அமைந்துள்ள நிலையில், தனது சொந்த கிராம கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் துர்கா ஸ்டாலின் காரணமாகவே 12 ஆண்டுகள் பூர்த்தியாக திருவெண்காடு ஆலயத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் 9 ஆண்டுகளில் மீண்டும் குடமுழுக்கு... துர்கா ஸ்டாலின் சொந்த ஊர் என்பதால் அவசர நிதி ஒதுக்கீடு? - பக்தர்கள் அதிர்ச்சி

ஆலயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், பாழடைந்து உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கும், ஒருகால பூஜைக்கு வழியில்லாத கோயில்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்னுரை வேண்டுமென பொதுமக்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
கும்பத்திலிருந்து மீன ராசிக்கு மாறும் சனிபகவான் : திருநள்ளாறு திருவிழாவிற்கு தயாராகும் காரைக்கால் - ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget