மேலும் அறிய

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

சீர்காழி அருகே தொடங்கப்பட உள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் ஊராட்சியில் தொடங்கப்பட உள்ள தனியார் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். 

தனியார் சோலார் பவர் பிளான்ட்க்கு எதிர்ப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழநெப்பத்தூர் கிராமத்தில் மெகா கிரீட் ஓல்ட்ராஸ் என்று தனியார் நிறுவனம் சோலார் பவர் பிளான்ட் அமைக்கும் பணியில் அதற்கான தடவாள பொருட்களும் கொண்டுவந்து வைத்து பணிகளை செய்துள்ளது. இந்த சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவாகவும், பெரும்பான்மையானோர் எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இதனால் கீழ நெப்பத்தூர், மேல் நெப்பத்தூர், நெப்பத்தூர், திருநகரி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறி இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை

இதனைத் அடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படமால் வண்ணம் வருவாய் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின்பு இது தொடர்பாக நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் 

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடித்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப்பெற்ற பின்னர் மீண்டும், சோலார் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்றும், அதனை முழுமையாக தடுத்து நிறுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று ஊர் மக்கள் ஒன்றுதிரண்டு, இதுதொடர்பாக கீழநெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

கூட்டத்திற்கு அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் செல்லப்பா, சி.பி.ஐ.எம்.எல். கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் தனியார் சோலார் பவர் பிளான்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், சோலார் பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மக்களை திரட்டி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மீண்டும் பேச்சுவார்த்தை 

அதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்தவாரம் சீர்காழி கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அக்கூட்டத்திலும் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பிலும் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நெப்பத்தூர் கிராமத்தில் இருந்து 200-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பவர்பிளான்ட் நிர்வாகிகள் இத்திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தன்னிலை விளக்கம் அளித்தனர்.

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத கிராமமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சோலார் பிளான்ட் நிர்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து, அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும். கிராம மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு சோலார் திட்டத்தை தொடரக் கூடாது என கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

சீர்காழி அருகே சோலார் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மீண்டும் மீண்டும் எதிர்ப்பு 

இந்நிலையில் மீண்டும் அப்பகுதியை சேர்ந்த மெய்யன் தெரு, சுள்ளான் தெரு மற்றும் அல்லிமேடு ஆகிய மூன்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கிராமங்களில் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வறுவதாகவும், சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டத்தை தொடங்குவதால் தங்கள் பகுதியில் நீர்வழிப் பாதை தடைப்படும் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள செல்லனாறு வடிகால் திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போகும் என்றும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் துறை சாராத எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்க கூடாது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget