மேலும் அறிய

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக திறப்பு! முன்னாள் ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு மக்கள் அதிருப்தி

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவல திறப்பு விழாவில் மாவட்டத்தை வரையறை செய்து முதல் ஆட்சியராக பணியாற்றிய ஐஏஎஸ் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை:

மயிலாடுதுறை புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான மாவட்ட ஆட்சியர் அலுவல திறப்பு விழாவில் மாவட்டத்தை வரையறை செய்து முதல் ஆட்சியராக பணியாற்றிய ஐஏஎஸ் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் போராட்டம் மற்றும் கால்நூற்றாண்டு கனவாக இருந்த தனிமாவட்டம் கோரிக்கையை 2020 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று மார்ச் மாதம் 2020 -ஆம் ஆண்டு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐஏஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அதே ஆண்டு ஜூலை 15 -ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2020 டிசம்பர் 28 -ஆம் தேதி மயிலாடுதுறை புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டு, மாவட்ட எல்லை வரையறை பணிக்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட லலிதா ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் பணி புரிந்தார்.

செயல்பட தொடங்கிய மாவட்டம்:

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக திறப்பு! முன்னாள் ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு மக்கள் அதிருப்தி

அதனை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது பின்னர், மாயூரநாதர் கீழவீதியில் இருந்த வணிகவரித்துறை அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து அங்கு தற்காலிக ஆட்சியர் அலுவலமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 21 ஏக்கர் இடத்தை ஆட்சியர் அலுவலகம், கட்டுவதற்காக தருமை ஆதீனம் வழங்கினார். அதற்கான பத்திரப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு 114.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக திறப்பு! முன்னாள் ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு மக்கள் அதிருப்தி

புதிய ஆட்சியர் அலுவலகம்:

இந்நிலையில் 7 மாடி கொண்ட பிரம்மாண்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா காணொலிகாட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு தீவிரம் காட்டியுள்ளது. 

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக திறப்பு! முன்னாள் ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு மக்கள் அதிருப்தி

ஆட்சியர் அலுவலகம் திறப்பு மக்கள் அதிருப்தி 

அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்ச் 4-ம் தேதி திறந்து வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட பிரிக்கப்பட்டு, அதனை வரையறை செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு, அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சுமார் இரண்டாண்டுகள் லலிதா ஐஏஎஸ் பணிபுரிந்தார். மேலும், ஆட்சியர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா முதல் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அவர் திடீரென மாற்றப்பட்டார்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக திறப்பு! முன்னாள் ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு மக்கள் அதிருப்தி

இந்த சூழலில் ஆரம்பம் முதல் மாவட்ட உருவாக்க பணியில் பெரும் பங்கு வகித்த லலிதா ஐஏஎஸ்-க்கு முதல்வர் கலந்துகொண்டு திறக்க உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு, அவர் கலந்து கொள்வார் என மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அழைப்பு விடாத நிலையில் அவர் புறக்கணிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Trichy: மணல் மாஃபியா கும்பலுக்கு உடந்தை? 25 போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் - திருச்சி எஸ்.பி. அதிரடி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Breaking News LIVE: 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
Embed widget