Breaking; காலையிலே பரபரப்பு! மயிலாடுதுறையில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை - என்ன நடக்கிறது?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் விடியற்காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் விடியற்காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது வருகிறது.
அதிகாலை சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளில் அதிகாலை 3 மணி அளவில் இருந்து கேரளாவில், ஆந்திரா, சென்னை இருந்து வந்துள்ள என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சீர்காழி காவல்துறையினர் துணையுடன் 15 குழுக்களாக அதிகாரிகள் வருகை புரிந்து 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் திருமுல்லைவாசல் கிராமத்தில் பரபரப்பான சூழலில் நிலவி வருகிறது.

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு..?
திருமுல்லைவாசல் பாசித், நபீன் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவு பெற்ற பின்னர் யார்? யாருக்கு? எந்தெந்த நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது என்பது குறித்த விபரமும், அவர்களிடம் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள், பின்னர் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
5 இடங்களில் சோதனை நிறைவு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் சோதனை பெற்ற நிலையில், 5 இடங்களில் சோதனை முடிவுற்ற நிலையில் ஒருவரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றனர். மேலும் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னனு சாதனங்களையும் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.






















