மேலும் அறிய

வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை காக்க இதையெல்லாம் செய்யுங்கள் - ஆட்சியரின் அட்வைஸ்

கோடை வெப்பத்தில் இருந்து கால்நடைகளை காப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோடை வெயில் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து கால்நடைகளை காப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் மழையின்மை  காரணத்தினால் கால்நடைகளுக்கு வெப்ப அயற்சி, சோர்வு, நீரிழப்பு போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். குறிப்பாக கடலோர பகுதிகளில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் இருப்பதனால் கால்நடை பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வெப்ப அயற்சியினால் கால்நடைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள். நிழலைத் தேடி செல்லுதல். அதிகமான தண்ணீர் குடித்தல், பசியின்மை, அதிகமாக உமிழ் நீர் வடித்தல், வேகமாக மூச்சு விடுதல், வாய் திறந்த நிலையில் சுவாசித்தல், உடல் வெப்பம் அதிகரித்து காணப்படுதல், வெப்பத்தினால் நீரிழப்பு ஏற்பட்டு நடுக்கத்துடன் கூடிய சாய்நிலைக்கு செல்லுதல்.

வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை காக்க இதையெல்லாம் செய்யுங்கள் - ஆட்சியரின் அட்வைஸ்

கால்நடைகளை கையாலும் முறை

கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு தீவன, குடிநீர் மேலாண்மை, அதிக வெப்பத்தினால் பாதிப்படையாமல் இருக்க காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணிக்குள்ளும் மேய்ச்சலை முடித்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மாடுகளுக்கு 30 முதல் 50 லிட்டர் வரையும், ஆடுகளுக்கு 10 முதல் 12 லிட்டர் குடிநீர் அளிக்க வேண்டும்.  24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் கொட்டகை மற்றும் மேய்ச்சல் இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்தல் வேண்டும். குடிநீரில் உப்பு, தீவனம், புண்ணாக்கு போன்றவை கலந்து வைப்பதனால் கால்நடைகள் தண்ணீர் பருகுவது அதிகரிக்கும். கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு கொட்டகை மேலாண்மை. கொட்டகையினுள் நீர் தெளிப்பான் உதவியுடன் குளிர்ந்த நீரை மாடுகள் மேல் தெளிப்பது, மின்விசிறி அளிப்பது, கொட்டகையின் மேல் பரப்பில் வைக்கோல், அல்லது தென்னக்கீற்றை பரப்பி அதன்மேல் நீர் தெளித்தல், கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் நடுவதன் மூலம் கொட்டகை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். 

எருமை மற்றும் பன்றிகள்

எருமை மற்றும் பன்றிகளுக்கு குளியல் தொட்டிகளை உருவாக்கி வெய்யில் நேரத்தில் அத்தொட்டியில் விடுதல். கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு இனப்பெருக்க மேலாண்மை. காலை 9 மணிக்குள்ளும் மற்றும் மாலை 5 மணிக்கு மேலும் சினை ஊசி போட்டுக்கொள்ளலாம். மேலும் தாது உப்புக்கலவையினை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 30-50 கிராம், ஆடுகளுக்கு 10-15கிராம் என்ற அளவிலும் தண்ணீரில் கலந்து வைக்கவும். 

வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை காக்க இதையெல்லாம் செய்யுங்கள் - ஆட்சியரின் அட்வைஸ்

கோடையில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் 

கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு நோய் மேலாண்மை, கோடையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதனால் அம்மை, அடைப்பான், கோமாரி, ஆட்டுக்கொல்லி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.  எனவே, கால்நடைகளை தகுந்த நேரத்தில் அரசின் மூலம் இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை கால்நடை மருத்துவர்கள் ஆலோசனைப்படி செலுத்தல் வேண்டும். கோழிகளுக்கான கோடைகால பராமரிப்பு மேலாண்மை, கோழிகளுக்கு உச்சி வெய்யில் நேரத்தில் தீவனம் அளிக்கக் கூடாது. இரவிலும், விடியற்காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வேண்டும். கோடையில் கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும். அதாவது வழக்கத்தை விட 20 விழுக்காடு குறைவான எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க வேண்டும். குடிநீரில் வைட்டமின் சி மருந்தினை தலா ஒரு கோழிக்கு 10 மில்லி கிராம் வீதம் கலந்து கொடுத்தல் அயர்ச்சி நீக்கும் பி-காம்ப்ளேக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவை கலந்துக்கொடுக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்              ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget