ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
சீர்காழியில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது குடும்பத்துடன் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்து அங்குள்ள குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை என்பது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு பண்டிகை. இருப்பினும் பொங்கல் போன்ற மற்ற பண்டிகைகள் போல இல்லாமல் தீபாவளி பண்டிகை சற்று காஸ்ட்லி பண்டிகையாகவே இருந்து வருகிறது. இதனால் செல்வந்தர்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு நடுத்தர குடும்பத்தினருக்கும், ஏழை எளிய வர்க்கத்தினருக்கு இந்த இனிப்பு பண்டிகையானது சற்று கசப்பான பண்டிகையாகவே எண்ண தோன்றுகிறது.
ஏங்கும் வர்க்கம்
அதிலும் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள், ஊரே கோலாகலமாக பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகளை உண்டும் மகிழ்ச்சியில் திளைக்க தங்களுக்கும் உறவினர்கள் இருந்திருந்தால் இவ்வாறு தீபாவளி மகிழ்ச்சி பொங்க கொண்டாட செய்திருப்பார்களே என்று ஏங்கும் வர்க்கம் ஏராளம் ஏராளம் உண்டு.
EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு
அன்பாலயத்தில் ஆட்சியர்
இந்த சூழலில் அவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க தீபாவளியை தித்திக்கும் தீபாவளியாக மாற்ற பல சமூக ஆர்வலர்களும் துன்புள்ளம் கொண்டவர்களும் தற்போது உதவி கரம் நீட்டி வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் உள்ள அன்பாலயம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில், தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு தீபாவளி என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வரும் புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்களை வழங்கி கொடுத்து அவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
IPL Auction 2025:அதிக சம்பளம்..கோலியை பின்னுக்குத் தள்ளிய வெளிநாட்டு வீரர்!வியப்பில் ரசிகர்கள்
அன்பகம் காப்பகம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தட்சணாமூர்த்தி நகரில் அமைந்துள்ளது ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அன்பாலயம் காப்பகம். இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவி ஜனனியுடன் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடினார்.
விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?
ஆட்சியருடன் கலந்துக்கொண்ட அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் செந்தில்குமார், சீர்காழி வட்டாட்சியர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்டவை வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் அதனை வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.