Diwali Pollution Affects: முடிந்தது தீபாவளி..! பல்வேறு மாசுபாடுகள், வரக்கூடிய உடல்நல பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி?
Diwali Pollution Affects: தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து பல்வேறு மாசுபாடுகளால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
Diwali Pollution Affects: தீபாவளி கொண்டாட்ட மாசுபாடுகளால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகளை, தவிர்ப்பது எப்படி என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டம்:
தீபங்களின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி, இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகங்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது விளக்குகளின் வெளிச்சம், குடும்பங்கள் ஓரிடத்தில் கூடுவது, துடிப்பான வானவேடிக்கைகள் மற்றும் சுவையான பாரம்பரிய இனிப்புகள் தயாரிப்பதன் மூலம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகை தின மகிழ்ச்சிக்கு மத்தியில், தீபாவளிக்கு பிந்தைய மாசுபாடு ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கவலையாக மாறியுள்ளது, குறிப்பாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில்,
தீபாவளியால் சுற்றுச் சூழல் மாசுபாடு:
பட்டாசுகள்: பட்டாசு வெடிப்பது தீபாவளி கொண்டாட்டத்திற்கு மிக முக்கியமானதாக இருந்தாலும், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டிற்கும் பிரதான காரணமாகிறது. பட்டாசு துகள்கள் (PM2.5 மற்றும் PM10), கார்பன் டை ஆக்சைடு (CO2), சல்பர் டை ஆக்சைடு (SO2), ஈயம் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் உட்பட பல்வேறு மாசுக்களை வெளியிடுகிறது.
அதிகப்படியான வாகன உமிழ்வு: தீபாவளி தினத்தன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அதிகளவில் பயணங்களை மேற்கொள்வதால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய உமிழ்வுகள் அதிகரிக்கும்.
பண்டிகைக் கழிவுகள்: அலங்காரங்கள், பரிசுப் பொருட்களிலிருந்து பேக்கேஜிங் மற்றும் பட்டாசுகளின் எச்சங்கள் திடக்கழிவுகளுக்கு பங்களிக்கின்றன. அவை குப்பைத் தொட்டிகள் அல்லது திறந்தவெளிகளில் குவிய மேலும் மாசுபாட்டை அதிகரிக்கின்றன.
மாசுபாடு வகைகள்:
காற்று மாசுபாடு: தீபாவளியின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பாதிப்பு காற்று மாசுபாடு ஆகும், இது அதிகப்படியான பட்டாசுகளை வெடிப்பதன் விளைவாகும். காற்றில் வெளியாகும் மாசுபாடுகள் புகைமூட்டம் மற்றும் மோசமான காற்றின் தரத்திற்கு பங்களிக்கின்றன.
ஒலி மாசுபாடு: பட்டாசுகள் மனித காதுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒலி அளவு வரம்புகளை அடிக்கடி மீறுகிறது. இது அதிக ஒலி மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக கைக்குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
நீர் மாசுபாடு: குறைவாக விவாதிக்கப்பட்டாலும், தீபாவளிக்குப் பிந்தைய கழிவுப் பொருட்கள் மற்றும் பட்டாசுகளின் எச்சங்களை முறையாக அகற்றப்படாவிட்டால் நீர் மாசுபாடு ஏற்படலாம்.
வரக்கூடிய பாதிப்புகள்:
சுவாசப் பிரச்சனைகள்: அதிக அளவு துகள்கள் சுவாசக்குழாயை எரிச்சலூட்டும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) போன்ற நிலைமைகளை மோசமாக்கும். ஏற்கனவே இதுபோன்ற பாதிப்புகளை கொண்ட நபர்கள் உடல்நல சிக்கல்களின் அதிக ஆபத்தில் உள்ளனர்.
ஒவ்வாமை எதிர்வினைகள்: சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற மாசுபடுத்திகள் தும்மல், இருமல் மற்றும் தோல் எரிச்சல் உள்ளிட்ட ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டும்.
கார்டியோவாஸ்குலர்: நுண்ணிய துகள்கள் நுரையீரலில் ஆழமாக ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கூட நுழையும். அவை இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
மோசமான காற்றின் தரம்: தீபாவளியின் போது காற்றின் தரக் குறியீடு (AQI) பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மோசத்தை எட்டுகிறது. இது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றன.
சத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் : பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அதிக சத்தம் காது கேளாமை, மன அழுத்தத்தை அதிகரிப்பது, தூக்கக் கலக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்:
காற்று சுத்திகரிப்பான்கள்: மிகவும் தேவயான உட்புற இடங்களில் ஏர்-ஃபில்டட்களை பொருத்துங்கள். குறிப்பாக மாசு அளவுகள் பொதுவாக அதிகமாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்துங்கள்.
மாஸ்க்: வெளியே செல்லும்போது N95 அல்லது அதுபோன்ற முகமூடிகளை அணிவது மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்களை வடிகட்ட உதவும்.
நீரேற்றத்துடன் இருங்கள்: நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
உங்கள் வீட்டை காற்றோட்டமாக வைத்திருங்கள்: காற்று சுழற்சியை அனுமதிக்க, பகலில் (மாசு அளவு குறைவாக இருக்கும் போது) தவறாமல் ஜன்னல்களைத் திறக்கவும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )