TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு
TN Rain Update: நவம்பர் முதல் வார இறுதியில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN Rain Update: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7 முதல் 11ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக” இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை:
இதனிடையே, மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “
01.11.2024: தமிழகத்தில் அறேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, இண்டுக் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை சிவகங்கை தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் உனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.24: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்பத்தார், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்க தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிற இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
02.11.24: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.11.2024 முதல் 06.11.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை எச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய வேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செய்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

