மேலும் அறிய

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரம் ஆதீனத்தில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் பெருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11 -ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். 

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

பல்லக்கு தூக்கும் நடைமுறை 

இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டினப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பல்லக்குதூக்கும் (பட்டினப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

முதல்வரிடம் சென்ற கோரிக்கை 

பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டினப்பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணை பிறப்பித்தார். இதனால், பட்டினப்பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், இந்நிகழ்விற்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக  தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

கொடியேற்றம்

இந்நிலையில் இந்தாண்டு தருமபுரம் ஆதீனத்தில் 11 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா மே-20 -ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 26-ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 28-ம் தேதி திருத்தேர் உத்ஸவமும், காவிரியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 30 -ஆம் தேதியான இன்று இரவு 10 மணியளவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  சிவிகை பல்லக்கில்  பட்டினப்பிரவேசம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு மீண்டும் மீண்டும் எதிர்ப்பு 

இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுர ஆதீன மடாதிபதி பட்டினப்பிரவேசம் விழா இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், திராவிடர் கழகம், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டினப்பிரவேசம் - எதிராக திரண்ட கட்சிகள்: மயிலாடுதுறையில் பரபரப்பு...!

மனிதனை மனிதனே சுமப்பதா ? என கேள்வி எழுப்பி தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க கோரியும், ஆதீனத்தை கண்டித்தும்  கண்டன உரை மற்றும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞானபிரகாசர் பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான இன்று தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து தங்கள் தோள்களில் சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வு  இரவு 10 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone LIVE:  புயல் எதிரொலி! சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி! சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று உணவு இலவசம்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களே... உங்களுக்குத்தான் இந்த முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா?
IND vs AUS: ஆஸி.யை தூசியாக்குமா இந்தியா? 150 ஆண்டுகள் பழமையான அடிலெய்ட் மைதானம் எப்படி?
IND vs AUS: ஆஸி.யை தூசியாக்குமா இந்தியா? 150 ஆண்டுகள் பழமையான அடிலெய்ட் மைதானம் எப்படி?
Embed widget