Indian Independence Day 2024: மயிலாடுதுறையில் முன்னதாக தொடங்கிய சுதந்திர தின கொண்டாட்டம்
மயிலாடுதுறை அஞ்சல் துறை சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
![Indian Independence Day 2024: மயிலாடுதுறையில் முன்னதாக தொடங்கிய சுதந்திர தின கொண்டாட்டம் Indian Independence Day 2024 awareness rally was held on the occasion of Independence Day by Mayiladuthurai Postal Department Indian Independence Day 2024: மயிலாடுதுறையில் முன்னதாக தொடங்கிய சுதந்திர தின கொண்டாட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/14/ca5868b323fd8d26da320c92cc2b4ef81723628852227733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை அஞ்சல் துறை சார்பில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
78வது சுதந்திர தினம்
இந்திய நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், கல்வி கூடங்கள் என பல இடங்களிலும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். மேலும் 78 -ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டையும், தேச ஒற்றுமை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அஞ்சல்துறை பேரணி
இந்நிலையில் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்கள் கலந்து கொண்டு பேரணியில் தேசிய கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். மயிலாடுதுறை தபால் துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தலைமையில் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி
பொதுமக்களுக்கு தேசிய கொடி
தொடர்ந்து பேரணியானது பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பட்டமங்கலம் தெரு மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அஞ்சலகத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தபால் துறையை ஊழியர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை கைகளில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். அப்போது பேருந்து நிலையங்களில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடமும், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்களிடமும் தேசியக்கொடி வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் பறிபோன இளைஞர் உயிர்..! மயிலாடுதுறையில் சோகம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)