மேலும் அறிய

அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

அதிமுக பாஜகவுக்கு அடிபணிந்து செல்கிறது என கூறும் திமுகவினர் ஏன் டெல்லியில் நிமிர்ந்து நின்று போராடி நிதியை வாங்கி தர முடியவில்லை.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும் என ராஜபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


அதிமுக ஆட்சிக்கு வந்த பின்  அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் உறுப்பினர்களின் உரிமை அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிமுகவினருக்கு உறுப்பினர் உரிமை அட்டை வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசும் போது, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்றுவிட்ட அகம்பாவத்தில் ஆணவத்தில் திமுகவினர் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லிக்கு செல்லலாம் கூச்சல் போடலாம் பக்கோடா சாப்பிடலாம். ஆனால் எதையும் சாதிக்க இயலவில்லை. முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு நிதி வாங்கி கொடுக்க முடியாத 40 எம்பிக்கள் இருந்தால் என்ன மாடு மேய்க்க சென்றால் என்ன. அதிமுக பாஜகவுக்கு அடிபணிந்து செல்கிறது என கூறும் திமுகவினர் ஏன் டெல்லியில் நிமிர்ந்து நின்று போராடி நிதியை வாங்கி தர முடியவில்லை. 40 பேர் சென்று ஒரு திட்டத்திற்கு கூட நிதி வாங்க வக்கு இல்லாத துப்பு இல்லாத கட்சி திமுக. அந்தக் கட்சிக்கு மக்கள் யாரும் இனி வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக நான்காக பிளவுபட்டது என்று திமுகவினர் கூறுகிறார்கள்.

LIVE | Kerala Lottery Result Today (14.08.2024): ஃபிஃப்டி ஃபிஃப்டி FF-106 முடிவுகள் 3 மணிக்கு! முதல் பரிசு - ரூ.1 கோடி


அதிமுக ஆட்சிக்கு வந்த பின்  அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அதுதான் அதிமுக,சிலருக்கு கண்மாயில் கெண்டை மீனும் கெளுத்தி மீனும் சிக்கியது போல் திமுகவுக்கு 40 எம்பிக்களும் மாநிலத்தில் ஆட்சியும் அமைந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் பாகுபாடு இன்றி மாதம் ரூபாய் 2500 டெல்லியை விற்று வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூறியிருக்கிறேன். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர், தொட்டில் குழந்தை திட்டம் என மகத்தான திட்டத்தை கொண்டு வந்த அம்மா ஆகிய இருவரின் கலவையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.


அதிமுக ஆட்சிக்கு வந்த பின்  அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

தற்போது அதிமுக சரியான இலக்கை நோக்கி சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நமது ஏவுகணை சரியாக குறி வைத்து இலக்கை நோக்கி தாக்கும். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி அதிமுகவின் எக்கு கோட்டையாக மாற்றுவோம். மின்சார கட்டணம் சொத்து வரி உயர்வு குறித்து காரணம் கேட்டால் மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை என திமுக கூறுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். நூற்பாலைகள் மூடப்பட்டு வருகிறது. விருதுநகரில் பருப்பு வியாபாரம் படுத்து விட்டது. பயிர்கள் கருகி வருகிறது. பட்டாசு தொழில், பேண்டேஜ் தொழில், நெசவுத்தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதை திமுக வினர் கண்டு கொள்வதில்லை. இதை விடுத்து கமிஷனுக்காக சண்டை இட்டுக் கொண்டிருக்கின்றனர். டிராக்டரில் மண் எடுத்தாலும் கமிஷன். வெறும் வண்டியாக சென்றால் ஏன் மண் எடுக்கவில்லை என்று கமிஷன் கேட்கிறார்கள். அவர்கள் வாயில் மண்தான் விழவேண்டும் 

நான் மந்திரியாக இருந்த 10 வருடங்களில் பிச்சைக்கார தனமாக இது போல் செய்யவில்லை. நியாய விலை கடைகளில் சென்று மண்ணெண்ணெய், பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவர்களை எடுத்துச் செல்கின்றனர். இது ஆட்சியா அல்லது காட்சியா,காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் சத்துணவு திட்டமாக விரிவு படுத்தினார். இலவசமாக சீருடை வழங்கினார். அம்மா மடிக்கணினி வழங்கினார். இப்படி ஏழைகளுக்கான திட்டங்களை எல்லாம் தீட்டி ஏழை மக்களை முன்னேற்றிய கட்சி அதிமுக.


அதிமுக ஆட்சிக்கு வந்த பின்  அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 2500 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பாதாள சாக்கடை ரயில்வே மேம்பாலம் தாமிரபரணி கூட்டு குடிநீர் சாலை பணிகளை தற்போது தான் 70% முடித்துள்ளனர். எந்த ஒரு ஆட்சிக்கும் நல்ல காலம் என்பது இரண்டரை வருடங்கள் மட்டுமே. மீதமுள்ள இரண்டரை வருடம் என்பது ஏழரை காலம். மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று விவசாய நிலத்திற்கு மண் அள்ளிச் சென்றால் ஒருவர் தடுக்கிறார். உனது மப்பு ஒடுக்கப்படும். கொன்றே விடுவோம்,நாங்கள் திருப்பி அடித்தால் உனது செவுள் அறுந்து விடும். நான் பேச தொடங்கினால் நீங்கள் யாரும் சாலைக்கு வர முடியாது. அனைவரையும் வேட்டை நாயை போல் உசுப்பி விட்டால் கடித்து குதறி விட்டு தான் திரும்புவார்கள். வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உனது அப்பன் வீட்டு சொத்தா. நகராட்சி உனது அம்மா விட்டு சொத்தா.எம் எல் ஏ சொல்பவருக்கு மட்டும்தான் மண் பாஸ் என்றால் நாங்கள் அவரை பெயில் ஆக்கி விடுவோம். இனி யாருடைய டிராக்டரயாவது தடுத்தால் நேரடியாக வீட்டுக்கு வந்து தூக்கி போட்டு மிதித்து விடுவோம். நேர்மை, மக்களுக்கு உழைப்பது, அகிம்சை, உண்மையாக இருப்பது புரட்சித் தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம். 

அதே நேரத்தில் நாங்கள் செல்லும் வழியில் முள்ளை போட்டால் மண்டையை உடைத்து விடுவோம். ஆவேசமாக உள்ள சிலரை அடக்கி வைத்திருக்கிறேன் ஜல்லிக்கட்டு காளைகளை திறந்து விட்டால் எங்கே சென்று என்ன செய்யும் என்பதை யாருக்கும் தெரியாது. சொந்த ஊரை விட்டு விட்டு பத்து வருடங்கள் டெல்லிக்கு தான் செல்ல வேண்டும். அடுத்து அதிமுக ஆட்சி பத்து வருடங்கள் நீடிக்கும். பின்னர் ஒரு இடைவெளி ஏற்படும். என்ன நினைத்து இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள். சர்வாதிகாரி நிலைமை எல்லாம் என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியுமா. எப்படி வாக்கு செலுத்தினோம் என்று மக்களுக்கே தெரியாமல் தான் ராணிஸ்ரீ குமார் தென்காசி தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நல்லது செய்வார்கள் என்று நம்பி திமுகவுக்கு வாக்களித்த மக்கள் ஏமாந்து விட்டனர்.

மக்களது வரி பணம் திமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். கள்ளக்குறிச்சியில் எப்படி கள்ளச் சாராயம் வந்தது என கேட்டால் வழக்கம்தான் என்கிறார்கள். அதே வழக்கம் போல் அதிமுக ஆட்சியில் 60 பேர் இறந்தார்களா.கமிஷன் வாங்குவதற்கு தான் சண்டை போடுகிறார்கள். கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் இதுதான் திமுக ஆட்சி. அதிமுக கொண்டு வந்த மினி கிளினிக் மூடியது உள்ளிட்ட சமூக விரோதமான திட்டங்கள் தான் திமுக ஆட்சியில் வந்துள்ளதே தவிர சமூகத்திற்கு தேவையான திட்டங்கள் வரவில்லை" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget