மேலும் அறிய

மயிலாடுதுறை: 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அக்டோபர் 11-ல்! வளர்ச்சி, நிதி, முக்கிய திட்டங்கள் விவாதம் - தவறவிடாதீர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிர்வாகக் காரணங்களால் அக்டோபர் 2 -ம் தேதி நடைபெற இருந்தக கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2, 2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சி, நிதிச் செலவினங்கள், பெயர் மாற்றங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் விவாதிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்று தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

கிராம சபையில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள்

மக்களாட்சியின் அடித்தளமாகக் கருதப்படும் இந்தக் கிராம சபை கூட்டத்தில், கிராமப் பகுதிகளின் உடனடி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட உள்ளது.

முக்கியத் தீர்மானங்கள் மற்றும் விவாதப் பொருட்கள்:

*மூன்று அத்தியாவசியத் தேவைகள்: கிராம மக்களின் மிக முக்கியமான மூன்று அத்தியாவசியத் தேவைகளைத் தேர்வு செய்து, அவை குறித்து கிராம சபையின் ஒப்புதலைப் பெறுதல்.

*பெயர் மாற்றம்: சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுதல். இது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

நிதி மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை

கிராம ஊராட்சியின் நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், நிதி செலவினங்கள் குறித்துக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

*பொது நிதி செலவினம்: 01.04.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கையான படிவம் 30 மற்றும் இதர விவரங்களைச் சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல்.

*தணிக்கை அறிக்கை: கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை (Audit Report) கிராம சபையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுதல்.

*ஊராட்சி நிர்வாகம்: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை குறித்து விவாதித்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.

சுகாதாரம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை

மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முக்கிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

*மழைநீர் சேகரிப்பு: ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தவும், அவற்றைச் சீரமைக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றுதல்.

*டெங்கு தடுப்பு: கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.

*வடகிழக்குப் பருவமழை: வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கும் திட்டங்கள் குறித்து விவாதித்தல்.

திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு

மத்திய, மாநில அரசுகளின் முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், சமூகப் பாதுகாப்பு குறித்தும் விரிவான விவாதம் நடைபெறும்.

*திட்டங்கள் முன்னேற்றம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - II ஆகியவற்றின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

*தூய்மை பாரத இயக்கம்: தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல்.

*சபாசார் செயலி: ஊராட்சி நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிய உதவும் சபாசார் செயலியின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தல்.

*தொழிலாளர் பாதுகாப்பு: குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அற்றதாக (Child Labour and Bonded Labour Free) கிராமம்/வார்டு/உள்ளாட்சி அமைப்பை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்துத் தொழிலாளர் துறையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

மகளிர் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி

கிராமப் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்களும் சபையில் இடம்பெற உள்ளன:

*மகளிர் மேம்பாட்டு நிறுவனம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான அறிக்கைகளைச் சபையில் சமர்ப்பித்தல்.

*திறன் பயிற்சி: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு விளக்குதல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் சான்றிதழ் வழங்குதல்.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் என அனைவரும் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தவறாது இந்தக் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். மக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் (மறுப்புகள்) தொடர்பான விவரங்களைக் கூட்டத்தில் விவாதித்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
மக்கள் தொகை கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
மக்கள் தொகை கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget