மேலும் அறிய

மக்கள் தொகை கணக்கெடுப்பு: மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 30-க்குள் நிறைவடையும் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

முதற்கட்ட பணிகள் தீவிரம் 

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான நிர்வாகப் பணிகளில் ஒன்றான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் முதற்கட்டமாக கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் முதற்கட்ட பணியான "வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு" (Houselisting and Housing Census) கடந்த 01.08.2026 முதல் தொடங்கி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணியானது எதிர்வரும் 30.08.2026 அன்று நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

1,453 ஆசிரியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இக்கணக்கெடுப்புப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, துல்லியமாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காகப் பெருமளவிலான களப் பணியாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

கணக்கெடுப்பாளர்கள் (Enumerators) 1,453 பேர்,

மேற்பார்வையாளர்கள் (Supervisors) 250 பேர்

இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் அனைவரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களே ஆவர். சமூக மாற்றத்திற்கும், மாணவர்களின் எதிர்காலத்திற்கும் அடித்தளமிடும் ஆசிரியர்கள், தற்போது நாட்டின் வளர்ச்சிப் பாதைக்குத் தேவையான இந்த முதன்மைத் தேசியப் பணியிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றி வருகின்றனர்.

துல்லியமான தகவல்களின் அவசியம்

இது குறித்து மேலும் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவிக்கையில், "ஆசிரியர்களாகிய கணக்கெடுப்பாளர்கள் தங்களின் வீடுகளுக்குத் தரவுகளைச் சேகரிக்க வரும்போது, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தின் நிலவரம் குறித்த சரியான மற்றும் துல்லியமான தகவல்களை எவ்வித தயக்கமுமின்றி வழங்கிட வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான தகவலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். குறிப்பாக,

கல்வி மற்றும் சுகாதாரக் கூட்டமைப்புகள், புதிய பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல். அடிப்படை வசதிகள், குடிநீர் இணைப்பு, வடிகால் வசதி, மின்சாரம் மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல். சமூகப் பாதுகாப்பு, ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதி மற்றும் புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்குதல். இவை அனைத்தும் மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு அரசால் திட்டமிடப்படுகின்றன."

30.08.2026-க்குள் பணியை நிறைவு செய்யக் கோரிக்கை

வீடுகள் கணக்கெடுப்புப் பணி வரும் 30.08.2026 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், எஞ்சியுள்ள நாட்களுக்குள் அனைத்துக் குடும்பங்களின் தரவுகளையும் முழுமையாகச் சேகரிக்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களை நாடி வரும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையுடனும், இன்முகத்துடனும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒருங்கிணைந்த செயல்பாடே வெற்றியின் ரகசியம்

இறுதியாக, மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது செய்தியில்: "மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஏதோ ஒரு சாதாரண அரசுப் பணி அல்ல. இது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தேசியக் கடமை ஆகும். நமது மாவட்டத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினாலும், முழுமையான ஒத்துழைப்பினாலும் மட்டுமே இக்களப் பணியை 100% வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

"நமது சென்சஸ்... நமது வளர்ச்சி!"

மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், அடுத்த தலைமுறையின் நலனுக்கும் அடித்தளமிடும் இத்தேசியப் பணியில் மயிலாடுதுறை மாவட்டப் பொதுமக்கள் அனைவரும் கை கோர்த்து, இக்கணக்கெடுப்புப் பணியை முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

10 கிராம் தங்கப் பதக்கம் வெல்ல அரிய வாய்ப்பு! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
10 கிராம் தங்கப் பதக்கம் வெல்ல அரிய வாய்ப்பு! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மக்களுக்குக் கிடைத்த அதிகாரம்! கிராமங்களின் முகச்சாயலை மாற்றப் போகும் 'TN VETRI' திட்டம்!
மக்களுக்குக் கிடைத்த அதிகாரம்! கிராமங்களின் முகச்சாயலை மாற்றப் போகும் 'TN VETRI' திட்டம்!
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
B.E, B.Sc, B.Com படித்தவரா? தாட்கோ வழங்கும் இலவச சான்றிதழ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு! முழு விபரம்..
ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget