மேலும் அறிய

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் செய்த சாதனைக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மாநில அளவிலான சாதனை விருதினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியர்

தமிழ்நாட்டின் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக திருவள்ளூர் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த ஏ.பி.மகாபாரதி கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் சிறப்பாக சிறப்பாக பணியாற்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆட்சியராக திகழ்ந்தார். மேலும் மக்கள் அனைவரும் எளிதில் அனுக கூடிய ஆட்சியராகவும் விளங்கினார்.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

அரசுப்பணியின் மூலம் மக்களுக்கு சேவை

மதுரை மாவட்டத்தின் சிறு கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அரசுப்பணியின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். அரசுப்பணியின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது அவரது லட்சியம். படித்தார், அரசுப்பணியில் சேர்ந்தார். நேர்மையான அதிகாரியாகத் திகழ்ந்தார், எந்தத் தடைகளுமில்லாமல் மக்கள் அவரை அணுக முடிந்தது. கருவூலகத்துறையில் உயரதிகாரியாக இருந்தார், அரசுப்பணியின்பொருட்டு அவசர வேலை காரணமாக துறையின் வாகனத்தை எதிர்பார்க்காமல் அரசுப்பேருந்தில் பயணித்தார். அந்தப் பேருந்தின் மீது ஒரு லாரி மோதியதில் மகாபாரதி வலதுகை துண்டாகியுள்ளது. அதில் சோர்ந்துபோகாமல் இடது கையால் எழுதப்பழகி தன் பணிகளைத் தொடர்ந்தார்.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

UPSCக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு அரசு 

அவருடைய அர்பணிப்பையும், நேர்மையையும் பாராட்டி தமிழ்நாடு அரசாங்கம் இவரின் சீரிய பணிக்காக UPSCக்கு பரிந்துரை செய்தது. அங்கு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், ஐஏஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டார். அரசுத் திட்டங்களை அமல்படுத்துவதில் அவரது நிர்வாகம் முன்னிலையில் இருந்தது. இதற்காக மாநில மத்திய அரசுகளின் விருதுகளும் கிடைத்தன. மக்களின் நன்மதிப்பிற்குரிய ஆட்சித்தலைவராகத் திகழ்ந்தார்.

கல்விக்கு அதிமுக்கியத்துவம் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் செயல்பட்டு வந்தார். குறிப்பாக கல்வியால் உயர்ந்த அவர் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி திறன்குறித்து சோதனை செய்து கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் வழிவகை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி தூய்மை, தண்ணீர் மேலாண்மை, விவசாயம் என அனைத்திலும் கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

திடீர் மாற்றம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் பொறுப்பேற்றார். இந்த திடீர் அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாற்றத்திற்கான காரணம்

மக்களை நேசித்த ஒரு அதிகாரி, எந்த சமரசமும் இன்றி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கான முனைப்பு காட்டிய அதிகாரி, காவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் சொன்ன வார்த்தைகள் முன்னும், பின்னும் துண்டிக்கப்பட்டு அவரது வார்த்தைகள் தவறாக சித்தரிக்கப்பட்டதில் கொடூரமானவராக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டார் என்று அறிய முடிந்தது. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு செய்தியை அணுகும் போது சமூகவலைதளங்களில் இதுபோன்ற ஆபத்து நேர்ந்து விடுவதுண்டு. சமூக வலைதளங்களின் அழுத்தத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் அரசுக்கு ஏற்பட்டுவிடும். பெரும் அரசியல் தலைவர்களே பிரச்சனை குறித்து சந்தர்ப்ப சூழலை உற்று நோக்காமல் மேலோட்டமாக தங்கள் கருத்துக்களை சமூகப் பெருவெளியில் பதிவிடும் போது பெரும் சமூக கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை தலைவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இந்த சம்பவத்தையும் உதாரணமாக கொள்ளலாம். அரசு அவர் கூறிய வார்த்தைகள் குறித்தும், அவருடைய சர்வீஸ் ரெக்காடு குறித்தும் தீர விசாரித்து முடிவெடுத்திருக்கலாம் என்பது அவரை நான்கு அறிந்தவர்களின் கருத்தாக இருந்தது.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

சிறப்பாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஒன்றில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது, தவறு செய்யும் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் இருதரப்பு சூழ்நிலை என்ன என்பதையும் அறிய வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அனைத்து நற்பண்புகளை பெற்றோர் போதிக்க வேண்டும் என்ற கருத்தினை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை உதாரணம் காட்டி பேசினார். அவரது பேச்சு முழுமையாக சென்றடையமால் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, எதிர்பாராத விதமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் அவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வேறு பொறுப்புகள் வழங்காமல் அரசு வைத்திருந்தது.

புதிய பொறுப்பு

இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக மகாபாரதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

மீண்டும் மீண்டும் விருது..

இந்த சூழலில் அவர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற நாள்முதல் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு விருதுகளை பெற்று வந்தார். கடைசியாக அவர் கடந்த ஜனவரி 26 -ம் தேதி குடியரசு தினம் அன்று கூட சென்னை நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் கையால் கொடி நாள் வசூலில் மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்ததை தொடர்ந்து அவருக்கு விருது வழங்கப்பட்டது. தற்போது அவர் மாற்றபட்ட நிலையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அவர் ஆற்றிய ஆத்மார்த்தமான பணியின் காரணமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற மாநில அளவிலான சாதனை விருது வழங்கும் விழாவில் மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் விருது வழங்கப்பட்டுள்ளது‌.

முன்னாள் ஆட்சியர் மகாபாரதிக்கு மீண்டும் மீண்டும் அரசு விருது..!

2023-24 -ஆம் ஆண்டில் குழந்தைகள் நலத்திட்டங்கள் மற்றும் குடும்ப நல சேவையை மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக செய்தமைக்காக முன்னாள் மாவட்ட ஆட்சியரும் தற்போதைய தமிழ்நாடு நீர்வடி பகுதி முகமை மேலாண்மை இயக்குநர் மகாபாரதிக்கு மாநில அளவிலான சாதனை விருதினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கையால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கல்யான் ரகசிய எண்ட்ரி? ஷாக்கில் மோடி, அமித்ஷா
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
IPL 2025 KKR vs RCB: மிரட்டிய ரஹானே! ஆட்டத்தை மாற்றிய பாண்ட்யா! ஆர்சிபி வெற்றிக்கு டார்கெட் என்ன?
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget