மேலும் அறிய

Diwali 2024: தீபாவளி அன்று இதனை செய்யுங்கள் - இதை செய்யாதீர்கள்: மயிலாடுதுறை ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்

தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக கொண்டாடுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள். தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  

Diwali 2024: தீபாவளி அன்று இதனை செய்யுங்கள் - இதை செய்யாதீர்கள்: மயிலாடுதுறை ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்

உச்சநீதிமன்ற வழிகாட்டல் 

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Diwali 2024: தீபாவளி அன்று இதனை செய்யுங்கள் - இதை செய்யாதீர்கள்: மயிலாடுதுறை ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்

நேரக் கட்டுப்பாடு 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் 

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Diwali 2024: தீபாவளி அன்று இதனை செய்யுங்கள் - இதை செய்யாதீர்கள்: மயிலாடுதுறை ஆட்சியர் கொடுத்த அட்வைஸ்

மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை: 

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: 

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல்வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget