டிக் டிக் நிமிடங்கள்...! மணிக்கூண்டில் வெடிகுண்டா? - அச்சத்தில் உறைந்து போன பொதுமக்கள்...!
மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுவிற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையிலில் அது புரளி என தெரியவந்துள்ளது.
மயிலாடுதுறையில் அடையாள சின்னம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மயிலாடுதுறை நகரத்தின் முக்கிய அடையாள சின்னமாக மணிக்கூண்டு விளங்குகின்றது. இது 1943 -ஆம் ஆண்டு போரில் தொடர் தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து, தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெர்மனியை வென்றதன் நினைவு சின்னமாக மயிலாடுதுறையில் கட்டப்பட்ட மணிக்கூண்டு வரலாற்றுச் சின்னமாக விளங்கி வருகிறது.
இங்கிலாந்தின் வெற்றிச்சின்னம்
ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்து வெற்றிபெற்றதன் நினைவாக மயிலாடுதுறை கடைவீதியின் மையப்பகுதியில் 1943 - ஆம் ஆண்டு அப்துல் காதர் என்பவரால் மணிக்கூண்டு கட்டப்பட்டது. 100 அடி உயரம் கொண்ட இந்த மணிக்கூண்டு மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் மயிலாடுதுறை மணிக்கூண்டிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்கட்டுப்பாட்டு அறை 100 -ஐ தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறபப்டுகிறது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக அங்கு மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து மணிக்கூண்டு பகுதி முழுவதும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை நடத்தினர். இதனால் மயிலாடுதுறை நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு புரளி என்பது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.