75th Republic Day: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழா
மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தின் 75 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு மைதானத்தின் 75 வது ஆண்டு குடியரசு தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
Ayodhya Ram Mandir: இனி ராமரை தரிசனம் செய்வது ஈஸி.. அயோத்தியில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட வசதி!
தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 5 பயனாளிகள், சமூக பாதுகாப்பு திட்டத்துறையில் 10 பயனாளிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகள், வாழ்ந்து காட்டும்வேம் திட்டத்தில் 2 பயனாளிகள், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகள், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பயனாளிகள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகள்,
Republic Day: இன்று 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியேற்றுகிறார் குடியரசுத் தலைவர்!
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் 3 பயனாளிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 3 பயனாளிகள் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்த ஆட்சியர், தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் கண்டு ரசித்தார்.
Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!