மேலும் அறிய
Advertisement
உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா; கொடியேற்றம் எப்போது..? கள்ளழகர் ஆற்றில் இறங்குவது எப்போது?
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிற்கான ஆயிரம்பொன் சப்பரத்திற்கான சப்பர மூகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.
சித்திரை திருவிழா:
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் - கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா - ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது என கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கள்ளழகர் வைபோகம்:
அதே போல் மே-2 ஆம் தேதி மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், 05ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நடைபெறும். உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும். 15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதிகள் வெளியாகியுள்ளன.
கொடியேற்றம்:
அதனடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், மே - 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது எனவும் இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 4ஆம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது . முன்னதாக கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவிற்கான ஆயிரம்பொன் சப்பரத்திற்கான சப்பர மூகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - AIADMK: வீட்டுக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்.. அடுத்து என்ன செய்ய போகிறார் ஓ. பன்னீர்செல்வம்..? வாய்ப்புகள் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion