2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து தமுக்கம் மைதானத்தில் பணிகள் தீவிரம்.!
தமுக்கத்தில் பணிகள் முடிந்தவுடன் பொருட்காட்சி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு இந்தாண்டு மதுரையில் வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற்றது. உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று முடிந்தது.
இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15-ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் சித்திரைத் திருவிழாவில் மக்கள் மனதை மகிழ்விக்கும் பொருட்காட்சி நிகழ்ச்சி தமுக்கம் மைதானத்தில் நடைபெறாமல் போனது சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
#மதுரை #சித்திரை #திருவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் #தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீண்டும் திருவிழா நடைபெறும் சமயத்தில் பயன்பாட்டிற்கு வரும்..... pic.twitter.com/L0GziA25fo
— Arunchinna (@iamarunchinna) April 29, 2022