மேலும் அறிய

Madurai: கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட மகளிர் தினம்! உற்சாகமாக பங்கேற்ற பெண்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராமத்தில் கோலாகலமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண்கள் புத்துணர்ச்சியுடன் பங்கேற்றனர்.

”பகிர்வு நூலகம் என்ற பெயரில் பண்டை மாற்று முறைப்படி நூலங்களில் எடுக்கும் புத்தங்களை பகிர்ந்து படிக்க ஏற்பாடுகளையும் செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தனர். 

மகளிர் தினம் கொண்டாட்டம்

நேருயுவ கேந்திரா மற்றும் வின் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மதுரை மாவட்டம் மேலூர், பழைய சுக்காம்பட்டியில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டம், மூத்த வயது பெண்களுக்கான ஆரோக்கியம், மார்பக புற்றுநோய் உள்ளிட்டவைகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசும், கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

விளையாட்டு மன இருக்கத்தை விலக செய்கிறது

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பெண்கள் பேசுகையில்...," எங்களுடைய கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் தினம் கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது மன இருக்கத்தை விலக செய்கிறது. மேலும் பெண்கள் வாழ்வில் முன்னேற்றத்தை எப்படி நிகழ்த்த வேண்டும் என்ற தலைப்பில் மன்ற இளைஞர்கள் பேசியது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பகிர்வு நூலகம் என்ற புதிய திட்டம்

மேலும் வின் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் கூறுகையில்..,” எங்கள் கிராமத்தில் இளைஞர் நற்பணி மன்றம் உருவாக்கி பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு பங்கேற்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டிகள் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினோம். கடந்த மாதம் பசுமை நிகழ்வு நடத்தினோம்.

அதில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, 1000 விதைப் பந்துகள் தூவுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியை நடத்தினோம். தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விளையாட்டுப் போட்டி வைத்து பரிசுகள் வழங்கினோம். இந்த நிகழ்ச்சி வெறும் விளையாட்டு போட்டியாக மட்டும் நடைபெறமால் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு விசயங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இளைஞர் மன்றம் கிராமத்தில் கல்வி, சுகாதாரம், பெண் பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு விடயங்களை செய்ய உள்ளோம். பகிர்வு நூலகம் என்ற பெயரில் பண்டை மாற்று முறைப்படி நூலங்களில் எடுக்கும் புத்தங்களை பகிர்ந்து படிக்க ஏற்பாடுகளையும் செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தனர். 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை அரசரடி இரயில்வே விளையாட்டு மைதானம் மீட்கப்பட்டது - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள் - மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் ஒரே பிசி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!
Embed widget